மேலும் அறிய

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை

இந்திய திரையுலகின் பிரபல பாடகரான ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற பாடகர் பி.ஜெயச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட அவர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 80. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு உள்ளிட்ட பல பாடல்களை அவர் தமிழில் பாடியுள்ளார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புகழ்பெற்ற பாடகர்:

பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி கன்னடம், இந்தியிலும் பாடல்களை பாடியுள்ளார். மிகப்பெரிய பாடகரான இவர் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். கேரள மாநிலத்தின் சிறந்த பாடகருக்கான விருதை 5 முறை வென்றுள்ளார். கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது வென்றுள்ளார். தமிழக அரசின் மாநில விருது மட்டும் 4 முறை பெற்றுள்ளார். இவரது மனைவி லலிதா. இவரது மகள் லட்சுமி, மகன் தினநந்தன்.

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் 1944ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிறந்தவர் ஜெயச்சந்திரன். சிறு வயது முதலே இசையை கற்றுத் தேர்ந்தார். மிருதங்கம், செண்டா வாசித்து கற்றுத் தேர்ந்துள்ளார். விலங்கியல் பட்டம் பெற்ற இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், நிகழ்ச்சி  ஒன்றில் இவரது பாடலைக் கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன், வின்சென்ட் மலையாள சினிமாவில் பாட அழைத்துச் சென்றனர்.  

தமிழில் எவர்கிரீன் ஹிட்:

1965ம் ஆண்டு சிதம்பரநாத் இசையில் ஒரு முல்லப்பூமலயுமாயி என்ற பாடலே இவர் பாடிய முதல் பாடல் ஆகும். ஆனால், அந்த பாடல் வெளியாக தாமதம் ஆகிய நிலையில் மஞ்சலையில் முங்கி தோர்த்தி பாடல்  மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதுதான் அதிகாரப்பூர்வமாக இவரது முதல் பாடல் ஆகும். 

தமிழில் எவர்கிரீன் ஹிட் அடித்த பல பாடல்கள் இவர் பாடியது ஆகும். தாலாட்டுதே வானம், கவிதை அரங்கேறும் நேரம், காளிதாசன் கண்ணதாசன், காத்திருந்து காத்திருந்து, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, பூவை எடுத்து ஒரு மாலை உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். 

பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்:

அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. பிரபல இசையமைப்பாளர்கள், முன்னணி நடிகர்கள் ஜெயச்சந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTV

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget