மேலும் அறிய

காதலியை நேரில் பார்க்க இப்படி ஒரு ஐடியா! புர்கா அணிந்து ஊருக்குள் சென்று சிக்கிய இளைஞர்!

உத்தரபிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து சென்ற இளைஞர் ஊர் மக்களிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது  ஷாஜகான்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து சென்று மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜகான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் மெகமத்பூர். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சையப் அலி. இவர் அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சையப் அலிக்கு வெளியூரில் வேலை கிடைத்துள்ளது.  வெளியூரில் வேலை கிடைத்த சையப் அலி தனது காதலியை பிரிந்து செல்ல மனமில்லாமல் இருந்துள்ளார். இருப்பினும், குடும்ப சூழல் காரணமாக வெளியூருக்கு வேலை செல்ல தயாராகியுள்ளார். இருப்பினும், வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது காதலியை நேரில் சென்று சந்திக்க சையப் அலி ஆசைப்பட்டுள்ளார்.

காதலியை நேரில் பார்க்க இப்படி ஒரு ஐடியா! புர்கா அணிந்து ஊருக்குள் சென்று சிக்கிய இளைஞர்!

தனது காதலியை பார்ப்பதற்காக இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவை அணிந்து சென்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்று சையப் அலி திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, அவர் புர்கா அணிந்து கொண்டு தனது காதலியை பார்க்கச் சென்றுள்ளார். சையப் அலி புர்கா அணிந்து கொண்டு சென்றாலும் அவரது நடவடிக்கையில் அங்கே இருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Crime: வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியர் வெட்டி படுகொலை - ஏராளமான போலீசார் குவிப்பு

இதையடுத்து, அவரை அழைத்து சிலர் விசாரித்துள்ளனர். அப்போது, அவரது குரலும், அவரது பதிலும் அங்கே இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, புர்காவை விலக்கி முகத்தை காட்டுமாறு அங்கே இருந்தவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு கூறியுள்ளார். இருப்பினும், அனைவரும் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் தனது முகத்தை மறைத்து இருந்த புர்காவை அகற்றினார். அப்போதுதான் புர்காவிற்கு உள்ளே இருந்தது பெண் அல்ல ஆண் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

காதலியை நேரில் பார்க்க இப்படி ஒரு ஐடியா! புர்கா அணிந்து ஊருக்குள் சென்று சிக்கிய இளைஞர்!

மேலும், அவரிடம் எதற்காக இவ்வாறு செய்தாய்? என்று உள்ளூர்மக்கள் விசாரித்தனர், அதற்கு அவர் தனது காதல் விவகாரத்தை கூறியுள்ளார். பின்னர், இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சிதவுலி காவல் நிலையத்தினர் சையப் அலியை கைது செய்து அழைத்துச் சென்றனர். சையப் அலியை போலீசார் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  அவர் புர்கா அணிந்து கொண்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து கொண்டு இளைஞர் சென்று மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க : Crime : கொலைக்கு காரணமான ஆட்டோ! சிறைக்கு சென்ற ரவுடி...! காத்திருந்து கொலை செய்த இளைஞர்..!

மேலும் படிக்க : Watch video: மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட புதிய தார் சாலை; கையால் பெயர்த்து எடுக்கும் அதிர்ச்சி வீடியோ

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget