மேலும் அறிய

"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் 08.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தது.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்:

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கைக் கடற்படையினர் 08.01.2025 அன்று கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 10 மீனவர்களையும், இலங்கை வசம் ஏற்கெனவே உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (09.01.2025) கடிதம் எழுதியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லிக்கு பறந்த கடிதம்:

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய அக்கடிதத்தில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் 08.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (5 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் IND-TN-06-MM-5102 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாகவே, இலங்கைக் கடற்படையின் இந்த அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்றன. இதை தடுத்து நிறுத்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வர்கள் சார்பில் பல முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை இந்த சம்பவங்கள் நின்றபாடில்லை.

இதையும் படிக்க: SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget