No Heavy rains places: தமிழ்நாட்டில் நாளை 24 மாவட்டங்களில் கனமழை இருக்காது: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
நாளை 24 மாவட்டங்களில் கனமழை இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில், கடந்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி வட கிழக்கு பருவமழையால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை கனமழை இல்லாத மாவட்டங்கள்:
இந்நிலையில், நாளை (நவம்பர்-3ஆம் தேதி) எந்த பகுதிகளில் கனமழை இருக்காது என தெரிந்து கொள்வோம்.
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை,கோவை, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி,மயிலாடுதுறை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 24 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 2, 2022
நாளை கனமழை பெறும் மாவட்டங்கள்:
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி,மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் நாளை(நவம்பர்- 3) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, வானிலை மையம் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும், அதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 2, 2022
நாளை மறுநாள் கனமழை:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
விடுமுறை:
ஆனால், இன்று மாலை முதல் சென்னையின் பல பகுதிகளிலும் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் நுங்கம்பாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், ஏர்போர்ட், வளசரவாக்கம், போரூர் ஆகிய பகுதிகளில் மாலை தொடங்கி மழை பெய்து வருகிறது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாளை மீண்டும் விடுமுறை அளிக்கப்படுமா அல்லது பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குமா என்பது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன