மேலும் அறிய

தமிழ்நாட்டில் இந்தப் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது - சீமான்

ஈழத்தாயக  விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது - சீமான்

இது குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல, உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை. 

இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம் தான்.

30 ஆண்டு காலம் இனவாத இலங்கை அரசின் கொடும்  அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றி தான் தமிழினத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை.

போராடினாலும் சாவோம், போராடாவிட்டாலும் சாவோம் ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

மேலும் , தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
Embed widget