எடப்பாடி பழனிசாமிக்கு இதை பற்றி பேச அருகதை கிடையாது - ஆவேசமான ஆர்.எஸ் பாரதி
வழக்கறிஞர் கொலைக்காக வருந்துகிறோம் அதை பேசுகிற அருகதை எடப்பாடிக்கு கிடையாது , தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்ட ஒழுங்குக்கும் சம்பந்தம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 1607 கொலைகள்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது x தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார். அவர் எடுத்த நடவடிக்கை குறித்து முதலில் அவர் தன்னையே பரிசீலித்து கொள்ள வேண்டும்.
2018 சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலை துறையில் 4800 கோடி ஊழல் செய்ததற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான்தான் வழக்கை தொடர்ந்தேன். நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. ஆனால் நீதிமன்றமே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இவ்வளவு பேசுகிற பழனிசாமி நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்திற்கு ஸ்டாலின் போகக்கூடாது என்று அறிக்கை விட்டுள்ளார். 2021 எடப்பாடி பழனிசாமி என்றும் நீதிமன்றத்தில் அந்த வழக்கை தொடர்ந்த நானும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. சிபிஐ வேண்டும் என்று நாங்கள் எந்த காலத்திலும் கேட்டது கிடையாது.
சட்டம் - ஒழுங்கிற்கு சம்பந்தம் இல்லை
வழக்கறிஞர் கொலை குறித்து எடப்பாடி பேசுகிறார். இதே சென்னையில் அமைச்சராக இருந்த தலித் ஏழுமலை மருமகன் கொலை செய்யப்பட்டார் அது யாருடைய ஆட்சியில் நடந்தது தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்ட ஒழுங்குக்கும் சம்பந்தம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் தானே எடப்பாடி. கொடநாட்டில் இருந்து கோட்டையை இயக்கியவர் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த கொடநாட்டிலேயே ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். 5 கொலைகள் கொடநாட்டில் நடந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் கொலை சம்பவம் - பட்டியலிட்ட ஆர்.எஸ் பாரதி
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் குத்திக் கொலை நவம்பர் 2, 2018
பெரம்பலூர் அருகே ஆசிரியரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை ஆகஸ்ட் 14 , 2018
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் படுகொலை கணவன் கைது டிசம்பர் 23 , 2020
கல்லூரி ஆசிரியர் கழுத்தை அறுத்து தீ வைத்து எரித்து கொலை கோவை 8 ஜனவரி , 2017
கள்ளக்காதல் விவகாரம் காரை ஏற்றி கொலை செய்தது ஏன் வயதான கொலைகாரன் வாக்குமூலம். சென்னை மே 9 , 2014
தூத்துக்குடியில் அரசு பள்ளி முன்பு ஆசிரியர் படுகொலை 2019
அதிமுக ஆட்சியில் 1672 கொலைகள் நடந்துள்ளன.திமுக ஆட்சியில் ஜூன் மாதம் வரையில் 792 கொலைகள் நடைபெற்றுள்ளன.
தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது. அப்படி இருந்தும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக தான் வென்றது.
எடப்பாடிக்கு அருகதை கிடையாது
வழக்கறிஞர் கொலைக்காக வருந்துகிறோம் அதை பேசுகிற அருகதை எடப்பாடிக்கு கிடையாது. கண்டிக்கிறோம் அதை பேசுகிற யோகிதை எடப்பாடி க்கு கிடையாது. சம்பவம் நடந்து விடும் உதயநிதி ஸ்டாலின் நேராக சென்று விசாரித்தார். சுவாதி கொலை நுங்கம்பாக்கம் இரயில் நிலையில் நடந்தது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் இறந்தார் அது அதிமுக ஆட்சியில் ஏன் மறைத்தீர்கள் ?. பொள்ளாச்சியில் என்ன நடந்தது ? அந்த குழந்தைகள் எல்லாம் அண்ணா என்னை விட்ருங்க என்று கேட்டது.இந்த சம்பவங்கள் எல்லாம் வருந்தத்தக்கது. அதற்காக உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என கூறினார்.