சென்னை பெசன்ட் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி... ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு...!
சென்னை பெசன்ட் நகர் எல்லியாட்ஸ் கடற்கரை சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகர் எல்லியாட்ஸ் கடற்கரை சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (16.04.2023) நடைபெற்றது. பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து சாலமோன் நினைவு அறக்கட்டளை மற்றும் 5K CAR CARE நிறுவனம் நடத்திய இந்நிகழ்ச்சியில் வியாசர்பாடி டான்பாஸ்கோ மாணவ, மாணவியர் மற்றும் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.
மேலும், ஹெல்மட் அணியாமல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் போக்குவரத்து காவல் ஆணையர் சக்திவேல், 5K CAR CARE நிறுவனர் மற்றும் சிஇஓ கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் ஹெல்மட் வழங்கி அறிவுறுத்தினர்.
சீட் பெல்ட் அணிந்து சென்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் 5K CAR CARE நிறுவனத்தின் இலவச கூப்பன்கள் வழங்கப்பட்டது. சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட், போக்குவரத்து காவல் ஆணையர் சக்திவேல் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார்.
5K CAR CARE நிறுவனர் மற்றும் சிஇஓ கார்த்திக் குமார் சின்னராஜ் அவர்களுக்கு அறக்கட்டளையின் பொருளாளர் ரூபன் நினைவுப்பரிசினை வழங்கினார். அறக்கட்டளையின் இணைச் செயலாளர் தியாகராஜன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் பவுலின், ஸ்டீபன், தியாகராஜன், ரூபன், பிரியதர்ஷினி, கிறிஸ்டோபர், சாரா, தண்டையார்பேட்டை பாபு, வில்லிவாக்கம் பாபு, ரசாக் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மிக அருமையாக ஸ்ரீவித்யா தொகுத்து வழங்கினார்.