உசிலம்பட்டி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சார்பில் 75 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைநகர் சென்னையை மிக்ஜாம் புயல் உலுக்கி எடுத்து சென்றுவிட்டது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் 40 செ.மீ மழை பதிவானது. இதனால் சென்னையில் இருக்கும் அனேக பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் வடபழனி, சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி ராயப்பேட்டை , ஊரப்பாக்கம், துறைமுகம் , எண்ணூர் , வியாசர்பாடி , சைதாபேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 47 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்த காரணத்தால் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
#madurai | மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சார்பில் 75 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
— arunchinna (@arunreporter92) December 6, 2023
| #ChennaiFloods | #ChennaiFloods2023 | #chennaicyclone | #madurai | @usilaigeetha |. pic.twitter.com/1Fsl0n3ZFz
தொடரும் மீட்புப்பணிகள்
இதனால், அத்தியாவசிய தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பால், தண்ணீர், மின்சாரம் போன்றவைகள் இல்லாமல் மூன்று நாளாக மக்கள் தவித்து வருகின்றனர். சில இடங்களில் மழைநீர் வடிந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் மின்சாரம் கிடைக்காமலும், மழைநீர் வடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, மூன்றாவது நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.