மேலும் அறிய

ஊரடங்கிலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்; மும்மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, கால் டாக்ஸிகள்!

முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுப்போக்குவரத்து சேவை இல்லாமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர். வாடகை ஆட்டோக்களில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், ஒமிக்ரான் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பொதுப்போக்குவரத்து சேவைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கிலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்; மும்மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, கால் டாக்ஸிகள்!

இருப்பினும், வெளியூர் செல்வதற்கான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து ரயில்கள் மூலமாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலரும் பொதுப்போக்குவரத்து இல்லாததால்  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் விழா அழைப்பிதழை காட்டி உரிய ஆவணங்களுடன் பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவும், பிற காரணங்களுக்காகவும் ஊரடங்கு தினத்திலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மக்கள் பலரும் பொதுப்போக்குவரத்தின் சேவை இல்லாத காரணத்தால் மணிக்கணக்கில் ரயில் நிலையத்திலே காத்திருக்கின்றனர்.

ஊரடங்கிலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்; மும்மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, கால் டாக்ஸிகள்!

ரயில் நிலையங்களில் இருந்து இயங்கும் வாடகை ஆட்டோக்கள், கார்கள் வழக்கத்தை விட மூன்று மடங்கு கட்டணங்கள் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், சிலர் மூன்று மடங்கு கட்டணம் அளித்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சிலர் தங்களது பகுதிகளுக்கு நடந்தே செல்கின்றனர். இன்னும் சில மக்கள் ரயில் நிலையங்களிலே காத்துள்ளனர். ஊரடங்கு தினத்தில் பொதுமக்கள் இவ்வாறு ரயில் நிலையங்களில் காத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய சாலைகள், பிரதான சாலைகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையின் உள்புற பகுதிகளில் பிற மாவட்டங்களின் கிராமப்புற பகுதிளிலும் இரு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றித்திரிந்தனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!

Embed widget