வண்டலூர் பூங்காவில் அதிசயம் : 20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள் - பராமரிப்பு பணியை தீவிர படுத்திய ஊழியர்கள்
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 அனகோண்டா குட்டிகள் மற்றும் 3 காட்டுப் பூனை குட்டிகளை பராமரிக்கும் பணி தீவிரம்..
சென்னையில் அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தினந்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் இந்த உயிரியல் பூங்காவிற்கு வந்து தங்களது நேரத்தை கழிக்கின்றனர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக இந்த உயிரியல் பூங்கா காணப்படுகிறது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பூங்கா உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான விலங்குகளின் இருப்பிடமாக உள்ளது. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகுடன் உள்ளது.
அரச சிங்கங்கள் மற்றும் கம்பீரமான யானைகள் முதல் விளையாட்டுத்தனமான குரங்குகள் மற்றும் அழகான மான்கள் வரை, பார்வையாளர்கள் அனைத்து வடிவங்களிலும் இயற்கையின் சிறப்பை காணலாம்.
இந்த விலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அடைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவை வாழ வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குகின்றது.
இந்த பூங்காவில் பல்வேறு வகையான பாம்புகள், பல்லிகள் மற்றும் முதலைகள் வசிக்கும் அதிநவீன ஊர்வன வீடும் உள்ளது. இங்கே, இந்த உயிரினங்கள் அவற்றின் அடைப்புகளில் வழுக்கி வலம் வரும்போது, பிரமிக்க வைக்கும் அழகைக் காணலாம். ஊர்வன வீடு, இந்த கண்கவர் உயிரினங்களால் ஈர்க்கப்படும் எவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயற்கையின் அழகை முழுமையாகக் காட்சிப்படுத்தும் அதிசயம் மற்றும் மயக்கும் இடமாகும். அதன் மூச்சடைக்கக்கூடிய சுற்றுப்புறங்கள் மற்றும் விலங்குகளின் பல்வேறு வரிசைகளுடன், இந்த பூங்கா குடும்பம் மற்றும் சரியான இடமாகும்.
20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள்
பொதுவாக இந்த பூங்காவில் வாழும் உயிரினங்கள் குட்டிகளை ஈன்றெடுத்தால், அதனை பராமரிக்க ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா பாம்பு ஒன்பது குட்டிகளை ஈன்றுள்ளது. இதேபோன்று மற்றொரு அனகோண்டா பாம்பு பதினோரு குட்டிகளை ஈன்றுள்ளது. ஆக மொத்தம் இரண்டு அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளது. பூங்காவில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த குட்டிகளை பூங்கா ஊழியர்கள் தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
மேலும் இதேபோல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தியாவில் மட்டுமே காணப்படும் காட்டு பூனை 3 குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் பூங்காவில் பணி புரியும் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவற்றை பராமரிக்கவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.