மேலும் அறிய

கோ - ஆப்டெக்ஸின் புதிய வடிவமைப்பு அறிமுகம் - அமைச்சர் சொன்னது என்ன ?

பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் வேட்டி, புடவைகள் குடும்ப அட்டைதார்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஆர். காந்தி பேட்டி

புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி ரகங்கள்

சென்னை பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி இரகங்களை வாடிக்கையாளர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வாடிக்கையாளர்களுக்கான கோ - ஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையினை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி ; 

தீபாவளி விற்பனைக்காக தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்ப நிறுவனங்களில் பயின்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட இளம் தலைமுறை மகளிருக்கான ஆயத்த ஆடைகளான, குர்த்தீஸ், கிராப் டாப், சார்ட்ஸ், ஜாக்கெட், கர்ட்ஸ் முதலிய இரகங்கள் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள், கைலிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள், ஆடவருக்கான பல்வேறு வகையான ஆயத்த சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், சுடிதார் இரகங்கள், வீட்டு உபயோக இரகங்கள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு இந்த தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது மற்றும் மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு இரகம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் துணிகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் "கோ-ஆப்டெக்ஸ்" குடும்பத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினராகக் கருதி இந்த சிறப்புரிமை அட்டை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் ரூ.100 நிகர மதிப்பிலான துணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

ஒரு புள்ளி என்பதின் மதிப்பு ரூ.1 ஆகும். இதன் மூலம் ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் துணிகள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை அடுத்தமுறை கோ-ஆப்டெக்ஸின் எந்த விற்பனை நிலையத்திற்கும் சென்று துணிகள் வாங்கும் போது இந்த புள்ளிகளுக்கான தொகையை ஈடு செய்து கொள்ளலாம்.

இந்த தீபாவளி பண்டிகை விற்பனைக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் விற்பனை நடைபெற்று வருகிறது.
கடந்த தீபாவளிக்கு கோ- ஆப்டெக்ஸ் 76 கோடி வருமானம் ஈட்டினோம்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மின் வணிக விற்பனையின் மூலம் இதுவரை ரூ.1.10 கோடி விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டு விற்பனையை விட ரூ.0.75 கோடி அதிகமாகும். தனியார் துணி நிறுவனங்கள், கோ ஆப் டெக்ஸ் துணியின் தரத்திற்கு போட்டி போட முடியாது. பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் வேட்டி, புடவைகள் குடும்ப அட்டைதார்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோMamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்Priyanka Gandhi  | ROAD Show-ல் காந்தி குடும்பம்?வரலாறு படைப்பாரா பிரியங்கா வாய்ப்பு தருமா வயநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Embed widget