IAS Exam Training : தமிழ்நாடு அரசு வழங்கும் ஐஏஎஸ் இலவசப் பயிற்சி, உதவித்தொகையுடன்.. இன்று முதல் தொடங்கிய வகுப்புகள்
சென்னையில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் சார்பில் படிக்க இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் சார்பில் படிக்க இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்டோருக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கி உள்ளன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குப் படிக்க, தமிழ்நாடு அரசு மையங்கள் சார்பில், ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் மற்றும் சென்னை, கோவையில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகளில் உயர்நிலையினை வெற்றி அடையும் பெற்று இந்திய நிர்வாகத்தில் வகையில், இங்கு பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் காற்றோட்டமான வகுப்பறைகள், தங்கும் இட வசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு இங்கு கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரூ.3,000 ஊக்கத் தொகை
சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்விற்குத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத் தேர்வு (மெயின்ஸ்) எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் மூன்றாயிரம் (ரூ.3000/-) ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது.
தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். சென்னை பயிற்சி மையத்தில் 225 முழு நேரத் தேர்வர்களும், 100 பகுதி நேரத் தேர்வர்களும் பயிற்சி பெறலாம்.
இந்நிலையில், அரசின் இலவசப் பயிற்சியைப் பெற விரும்பும் தமிழக மாணவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பித்தனர்.
நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை
பயிற்சி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்து. இதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இந்நிலையில் அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்