E-pass | சென்னைக்குள் இ-பதிவு அவசியமா? சந்தேகங்களும், பதில்களும்!
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய அமலுக்கு வந்தது. இந்நிலையில் தலைநகரான சென்னைக்குள் பயணிக்கும் மக்களுக்கு இ-பதிவு தொடர்பான பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய அமலுக்கு வந்தது. இந்நிலையில் தலைநகரான சென்னைக்குள் பயணிக்கும் மக்களுக்கு இ-பதிவு தொடர்பான பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வாடகை கார், ஆட்டோக்கள் சென்னைக்குள் செல்வதற்கே இபாஸ் வேண்டுமா? தடுப்பூசி போட செல்பவர்கள் இபாஸ் எடுக்கவேண்டுமா? போன்ற சில தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்கவே இந்தத் தகவல்களை கொடுக்கிறோம்.
In the areas of Greater Chennai Corporation, from 7th June till 14th June 6 AM, along with some relaxations the lockdown shall be continued for another week.#GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/rDFMhUR91N
— Greater Chennai Corporation (@chennaicorp) June 5, 2021
யாருக்கெல்லாம் இ- பதிவு தேவை?
தனியார் செக்யூரிட்டி ஆட்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் இ-பதிவு மூலம் பயணிக்கலாம்
எலெக்ட்ரீசியன், ப்ளம்பர்ஸ், கணினி மற்றும் மோட்டார் பழுது நீக்குபவர்கள், மர வேலை செய்யும் தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்யும் டெக்னீஷியன்கள் ஆகியோர் இ-பதிவு மூலம் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை பயணிக்கலாம்.
வாடகை கார், வாடகை வாகனங்கள் 3 பயணிகளுடன் இ-பதிவு பெற்று பயணிக்கலாம். ஆட்டோவும் இ பதிவு பெற்று இரண்டு பயணிகளுடன் பயணிக்கலாம்
சென்னைக்குள் பயணம் செய்யும் தனியார் வாகனங்களுக்கும் இ-பதிவு அவசியம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இ-பதிவு தேவையா?
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசி மையத்திற்கு பயணம் செய்தால் இ-பதிவு தேவையில்லை. தடுப்பூசிக்கான முன்பதிவை காண்பித்தால் போதுமானது. சுய தொழில் செய்பவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் இ-பதிவுக்கு இணையதள பக்கத்தில் ஒரே நேரத்தில் குவிவதால் இணையதளம் அவ்வப்போது முடங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
>>அடுத்த 100 நாட்களில் அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் அமல்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மற்ற தளர்வுகள்:
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.
* காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.
* இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி செயல்படுத்த அனுமதி உண்டு.
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளலாம்.
* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அனுமதி.
* மின்பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.
* இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.
* வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.
* கல்வி, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி
* இருசக்கர வாகனம் விநியோகிக்கும் கடைகள் வாகன பழுதுபார்க்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி
* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து பெற்று பயணிக்கு அனுமதிக்கப்படும்.
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
>> சத்தமில்லாமல் சாதிக்கும் சித்த மருத்துவம்; 20 நாளில் 194 பேர் பூரண குணம்!