அடுத்த 100 நாட்களில் அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் அமல்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அனைத்து சாதியனரும் அர்ச்சகராகும் சட்டத்தை இன்னும் 100 நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

FOLLOW US: 

சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டெடுக்கும் பணி இன்று சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,

அடுத்த 100 நாட்களில் அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் அமல்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

"சாலிகிராமத்தில் உள்ள கருணாநிதி தெருவில் வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள 5.50 ஏக்கர் நிலம் ஆக்கரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வாகனம் நிறுத்த பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அது மீட்கப்பட்டு உள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை எடுத்துச் செல்ல 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து உள்ளோம் அதற்குள் அவர்கள் அந்த வாகனத்தை எடுத்து கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார், மேலும் தற்போது மீட்டநிலம்  வடபழனி திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அவர்கள் இந்து அறநிலையத் துறைக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை  எனவும் சேகர்பாபு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பதவி.  ஏற்று ஒரு மாத காலம் தான் நிறைவடைந்துள்ளது அதற்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் டிரைலர்  தான் மேயின் பிச்சரை இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள் என்றார்.  அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும். அதை முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

 கோவில் நிலத்தில் நீண்ட நாள் இருக்கும் மக்களுக்கு அவர்கள் நலம் கருதி அந்த நிலத்தை அவர்களுக்கு வாடகை விடப்படும் கோவில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தற்போது மீட்ட இடத்தில் மக்களுக்கு நல்லது எதுவோ அது செய்யப்படும். திமுகவின் நடவடிக்கைகளை பாஜகவினர் விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு 

பாஜகவில் நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்ட பாஜக நிர்வாகிகள் ஏதேதோ பேசி இருப்பார்கள்.  நல்லது என்றால் அதை ஏற்று கொள்வோம் இல்லை என்றால் அதை ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள மாட்டோம். தவறு யாரு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற அவர்,  கடந்த காலங்களில் நடந்த தவறுகளை கிளறினால் நாட்கள் போதாது  நேரமும் போதாது அத்தனை ஊழல் முறைகேடு மோசடி நடந்திருக்கிறது. தற்போது விமர்சனங்களை புறம்தள்ளி மக்கள் சேவையில் கவனத்தை செலுத்துகிறோம் என தெரிவித்தார். அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தின் படி மதுரையில் இரு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதே போல் அதற்கான முறையான பயிற்சி பெற்ற பலரும் தங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: dmk Stalin hindu temple All castes are priest Sekarbabu

தொடர்புடைய செய்திகள்

துபாயில் தாயின்றி தவித்த 10 மாத குழந்தை; மீட்டு கொண்டு வந்த திமுக எம்.பி.,

துபாயில் தாயின்றி தவித்த 10 மாத குழந்தை; மீட்டு கொண்டு வந்த திமுக எம்.பி.,

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

Tamil Nadu Coronavirus LIVE News : நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்; இத்தனை சிறப்புகளை கொண்டதா?

‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

Stalin Meets Congress Leaders | சோனியா, ராகுலை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Stalin Meets Congress Leaders | சோனியா, ராகுலை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

டாப் நியூஸ்

நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு