அடுத்தது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி; குவியும் பாலியல் புகாரால் பெற்றோர் அதிர்ச்சி!

சென்னையில் பிரபல பள்ளியை தொடர்ந்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக குழந்தைகள் நல உரிமை ஆணையத்தில் முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் கடிதம் அளித்துள்ளனர்.

FOLLOW US: 

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்,  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் சிறையில் அடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.  இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உளவதாக, முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்று பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். 

இதுகுறித்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தமிழ்நாடு  குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

அடுத்தது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி; குவியும் பாலியல் புகாரால் பெற்றோர் அதிர்ச்சி!

செட்டிநாடு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. பாலியல் ரீதியாகவும், உடல் அமைப்பையும் வைத்தும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.  இது தொடர்பாக பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படாதது  கண்டனத்திற்குரியது. பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத என பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்று கூட இதுவரை விசாரிக்கப்படவில்லை. மாணவிகளின் உடைகளை மைதானம் போன்ற பொது வெளியில் நடத்துவது விமர்சிப்பது போன்ற பல்வேறு துன்புறுத்தல்களுக்கு தற்போதும் மாணவிகள் உள்ளாகின்றனர். இதுபோன்று புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  இதுபோன்று பாதிக்கப்படும் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையாக பள்ளி நிர்வாகமே பொறுப்பாக வேண்டும். பழைய புகார்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று என்றும் மாணவர்களின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி; குவியும் பாலியல் புகாரால் பெற்றோர் அதிர்ச்சி!

பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டதாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஆசியர்கள் மீது தொடர்ந்து புகார் அளித்து கொண்டு வருவது அவசியமாகி வரும் நிலையில் தமிழ்நாடு  குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது

Tags: school child abouse PSBB chettinadu vidhyasram sex

தொடர்புடைய செய்திகள்

Vellore :  ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

CRZ Violation : மரக்காணத்தை நோக்கி படையெடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் , அழிவின் விழும்பில் 20 மீனவ கிராமங்கள் ! 

CRZ Violation : மரக்காணத்தை நோக்கி படையெடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் , அழிவின் விழும்பில் 20 மீனவ கிராமங்கள் ! 

Vellore : 113 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : தடுப்பூசி செலுத்தும் பணிகளின் நிலவரம் என்ன?

Vellore :  113 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : தடுப்பூசி செலுத்தும் பணிகளின் நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !