(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Power Cut: சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
Chennai Power Cut: சென்னையில் நாளை தாம்பரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் மின்பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
Chennai Power Cut: சென்னையில் நாளை தாம்பரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.
மின்சாரம் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் அந்தந்த பகுதிகளில் மின் உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில், சென்னையில் நாளை தாம்பரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தாம்பரம்
தாம்பரம் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அப்பத்தூர்
அம்பத்தூர் பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்பேர் பிளாட்டினம் அபார்ட் மெண்ட், சென்னை பப்ளிக் பள்ளி, டிவிஎஸ் காலணி 46, 48, 56 தெருக்கள், பாடி அன்ணை நகர், ராஜீவ் நகர், வைகை நகர் கிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்வதும், மின் தொடர்பான பணிகளை விரைந்து முடிப்பதும் சிரமத்தை தவிர்க்க உதவும். தமிழ்நாட்டில், கடந்த மாதம் அக்டோபர் 29-ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையில் நாளை இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை இரண்டு இடங்களில் அதாவது தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது மின் தொடர்பான பணிகளை விரைந்து முடிப்பது சிரமத்தை தவிர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
RAJINIKANTH: இல கணேசன் இல்ல விழாவிற்கு சிங்க நடை போட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!