Covid Restriction: புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள்...? காவல் ஆணையர் பதில்
சென்னையில் ஓட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை அனைவரும் விரும்பி கொண்டாடக்கூடிய ஒன்று. அந்த வகையில் சென்னையில் அன்று நள்ளிரவு இளைஞர்கள் என பலரும் விமர்சையாக கொண்டாடுவார்கள். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுப்பாடுகள்?
இதுதொடர்பாக சென்னை காவல்ஆணையர் சங்கர் ஜிவால் நிரூபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தொடர்பாக ஓட்டல் மற்றும் ரிசார்ட்டு போன்றவைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் எந்த அளவு ஆட்களை அனுமதிக்க முடியுமோ, அந்த அளவுக்கு தான் டிக்கெட்டுகளை வழங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகளை வழங்க கூடாது. இதனால் தேவையில்லாத பிரச்சனை வர வாய்ப்புள்ளது. உரிய விதிமுறைகளை ஓட்டல்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
ஆலோசனை
மேலும், ”கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினருடன் வரும் 29-ஆம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் நேரம் குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்" என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றங்கள்
இதனை தொடர்ந்து பேசிய அவர், ” சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகள் 75 சதவீதம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். நைஜீரியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்துவர்களும் இதுதொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சைபர் குற்றங்களை விசாரிக்க சென்னையில் ஒரு காவல்நிலையம் தான் இருந்தது. தற்போது 5 காவல் நிலையங்கள் உள்ளன” என்று சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது வாகன சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பது தற்போது தினமும் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையானது புத்தாண்டு வரை தொடரும் என்று தெரிவித்தார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை யாருக்கு இடையூறு இல்லாமல், அந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் படிக்க
Corona: இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை... தயார் நிலையில் மருத்துவமனைகள்..!