Karnataka Covid Guidelines: பெங்களூருவில் அமலுக்கு வந்தது கொரோனா தீவிர கட்டுப்பாடு..! புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி..?
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தீவிர கட்டுப்பாடுகள்:
கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் பார்களில் புத்தாண்டை கொண்டாட முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விடங்களில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Masks have been made mandatory inside movie theatres, schools&colleges. Masks will be mandatory to celebrate the New Year in pubs, restaurants & bars. New Year celebrations to end before 1 am. No need to panic, just have to take precautions: Karnataka Health Minister
— ANI (@ANI) December 26, 2022
(file pic) pic.twitter.com/cUY63BcaRG
இதுகுறித்து, கர்நாடக சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவிக்கையில், யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை, கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )