மேலும் அறிய

Chennai Metro Train:95.43 லட்சம் பேர் பயணம் - ஜெட் வேகத்தில் உயரும் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை!

Chennai Metro Train:மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் அதிகரித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 95.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டில் கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 8,606 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும் இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய சாதனை:

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 14.08.2024 அன்று 3,69,547 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,42,595 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 16,026 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,050 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,97,858 பயணிகள் (Online QR 1,82,229; Paper QR 22,55,079; Static QR 2,65,545; Whatsapp - 5,54,218; Paytm 4,54,875; PhonePe – 3,36,152; ONDC – 49,760), மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,81,096 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

டிக்கெட் சலுகை

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கியுள்ள க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.  வாட்ஸ்அப் டிக்கெட் (+91- 83000 86000 ) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பயணிகள் நிறைவடைந்தால் மெட்ரோ இரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Embed widget