மேலும் அறிய

Chennai Train Issue: சென்னையில் 44 மின்சார ரயில்கள் திடீர் ரத்து; நடந்தது என்ன.? தெற்கு ரயில்வே முக்கிய தகவல்

சென்னையில் 44 மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், அது குறித்து தெற்கு ரயில்வே முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் மின்சார ரயில்களை நம்பியுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் திடீரென 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்த சூழலில், தெற்கு ரயில்வே அது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

“இன்றைய தற்காலிக சிரமம் நாளைய சிறந்த சென்னை எழும்பூராக மாறும்“

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு தெற்கு ரயில்வே. சென்னை கோட்டம் மனமாரக் கேட்டுக்கொள்கிறது.

இந்த முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவில் சில புறநகர் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்படுவதும் இடம்பெற்றுள்ளது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாக திட்டமிடப்பட்டவை ஆகும்; திட்டமிட்ட காலக்கெடுவில் பாதுகாப்பாகவும் திறம்படவும் பணிகளை நிறைவேற்றுவதற்காக அவை அவசியமானவை.

இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டத்தின் நோக்கம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய, பயணிகள் நட்பு நிலையமாக மாற்றுவதாகும். மேம்பட்ட வசதிகள், உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனினும், தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்க இவை அவசியமானவை.

சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, செயல்பாட்டு தோல்வி அல்லது பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் குறித்த தவறான தகவல்கள் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

அனைத்து ரயில் இயக்கங்களும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கடுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

பயணிகள் பாதிப்பு குறித்த முழுமையான மதிப்பீட்டின் பின்னரே இந்த செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் செயல்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர்.

பயணிகள் அனைவரும் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வழிகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பும் புரிதலும் உடன், இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, அனைவருக்கும் பாதுகாப்பான, திறம்பட்ட மற்றும் வசதியான பயண அனுபவத்தை உருவாக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.“ என தெற்கு ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget