மேலும் அறிய

சென்னையில் சோகம்... எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து... 8 வடமாநில தொழிலாளர்கள் பலி

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியில் முகப்பு சாரம் சரிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்,

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது ஏற்ப்பட்ட கோர விபத்தில் 8 பேர்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

எண்ணூர் விபத்து:

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியில் முகப்பு சாரம் சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர், மேலும் காயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதற்கட்டத் தகவலின்படி, உயிரிழந்த 8 பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு காவல்துறை மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.

இரங்கல்: 

எண்ணூர் விபத்து குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள பதிவில் இன்று(30.09.2025) எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணியின் போது சாரம் சரிந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், காயமுற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.

இந்த துயரச் சம்பவம், கட்டுமானப் பணிகளின் பாதுகாப்பு குறித்த அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. முறையான திட்டமிடல் இல்லாமை, கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, கட்டுமானப் பொருட்களின் தரக்குறைவு போன்றவையே இத்தகைய துர்மரணங்களுக்கு காரணமாகின்றது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற விரும்பதகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கவேண்டும்.

விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கரூரில் கடந்த சனிக்கிழமை அன்று தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் 41 உயிரிழந்த சோகமே அகலாத நிலையில் இந்த விபத்து செய்தி பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Chennai power cut: சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget