Chennai Electric Trains Canceled : பராமரிப்பு பணி.. சென்னையில் இங்கெல்லாம் மின்சார ரயில்கள் ஓடாது.. முழு விவரம் இதோ..!
பராமரிப்பு பணி காரணமாக இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அவை எந்தெந்த ரயில்கள் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

பராமரிப்பு பணி காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “ திருவள்ளூர் இடையே (43705) காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ( 43753,43109) காலை 10.05,11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட் - ஆவடி ( 43013,43015, 43017) காலை 10.15, 10.45. 12.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் - கடம்பத்தூர் இடையே இயக்கப்படும் (43901,43903) காலை 10.30, 12.10 மணி ரயில், மூர்மார்க்கெட் -அரக்கோணம் இடையே (43413,43415) காலை 11.00, 12.30 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை ஆவடி இடையே (43605) காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் , மூர்மார்க்கெட் - திருவள்ளூர் இடையே (43221,43223,43225) காலை 11.30, 12,1 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் திருத்தணி இடையே (43821) மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் (43111) மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

