மேலும் அறிய
Advertisement
Crime : கண்ணில் பட்ட மக்களுக்கு அரிவாள் வெட்டு; நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கி ரவுடிகள் அட்டகாசம்..!
சென்னை ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை வெட்டியதாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை கிண்டி அருகே அமைந்துள்ளது ஆலந்தூர். சென்னையின் முக்கிய பகுதியான ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் திடீரென 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் ஒன்று சாலைகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றியது. அப்போது, அந்த கும்பல் சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது. மேலும், அந்த வழியாக சென்றவர்கள் மீது பட்டாக்கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மீது அந்த ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது. இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் நள்ளிரவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுதல் வேட்டையில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion