மேலும் அறிய
Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?
ராணுவ பயிற்சி முகாமில் வெடிக்காத குண்டுகள், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வீரர்கள் பயிற்சி முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு, ராணுவம் ரயில்வேதுறை, தமிழக காவல்துறை ஆகிய துறை உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவப்பொழுது ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சி, சிறிய வகை ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தும் பயிற்சி, போர்க்காலத்தில் பயன்படுத்தப்படும் புகை குண்டுகள் ஆகியவற்றை கொண்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, அனுமந்தபுரம் காட்டுப்பகுதி மற்றும் ராணுவ பயிற்சி நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பொதுமக்கள் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது என உத்தரவு போடப்பட்டு பாதுகாப்புடன் இந்த பயிற்சி நடைபெறும்.
மலையில் கிடந்த மூன்று குண்டு
அதேபோல பயிற்சி முடிந்த பின்பு, வீணாகும் துப்பாக்கி குண்டுகளின் கழிவு பொருட்கள், அதேபோல் வெடிக்காத குண்டுகள் ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபடும் வீரர்களே அப்புறப்படுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் , இன்று அப்பகுதியை சேர்ந்த சிலர் வெடிக்காத மூன்று ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை பார்த்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வண்டலூர் துணை ஆணையர் சிங்காரவேலன் தலைமையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செயலிழக்க செய்யப்படும்
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களும் வரவேற்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. துறை அதிகாரிகள் வெடிகுண்டுகளை மீட்டு, குழி தோண்டி சுற்றி மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைத்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய உரிய முறையில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் சம்பந்தப்பட்ட (வெடிபொருள் தடவியல்) துறை நிபுணர்கள் மூலமாக பாதுகாப்பாக வெடிகுண்டுகள் செயலிழக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு..
அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டில் இருந்து, வெடித்து சிதறிய வெடிகுண்டுகளின் உதிரி பாகத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட விவசாயி வெடிக்காத குண்டுகளை சேகரித்து தனது வீட்டில் வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சுமார் அவர் வீட்டிலிருந்து 149 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த குண்டுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படி செயலிழக்கம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே பகுதியில் வீரர்கள் வெடிக்காத குண்டுகளை , விட்டு விட்டு சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion