Ground Water Level: செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படுமா ? - குறைந்த நிலத்தடி நீர்மட்டம்
Ground Water Level : செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள காரணத்தினால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த வருடம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தாலும் தண்ணீர் பஞ்சம் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை ( Chennai ) புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு (Chengalpattu News): அதிகளவு மக்கள் தொகை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை செயல்படும் மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில், அதிகளவு குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகள் இல்லாமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக அதற்கு முன்னால் பருவமழை காலங்களிலும், அது மட்டும் இல்லாமல் அவ்வப்பொழுதும் மழை பெய்து வந்ததால் குளம் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தொடர்ந்து தண்ணீர் இருந்து வந்தது. அதேபோன்று முக்கிய நீர் ஆதாரமாக இருக்கக்கூடிய பாலாற்றிலும் வரலாறு காணாத வெள்ளம் கடந்த வருடம் சென்றது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டமானது இயல்பை விட சற்று அதிகரித்து இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்