மேலும் அறிய

சிறுமியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு !! காதலன் செய்த வெறிச் செயல் !!

திருமணம் செய்து வைக்க பெண் வீட்டார் மறுத்ததால் , சிறுமியின் குடும்பத்தினரை கத்தியால் குத்தி இளைஞர் வெறிச் செயல்

சிறுமியை காதலித்த இளைஞர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே  கொண்டேகவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி ( வயது 45) இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் தனது தாய் திருமாத்தாள் (வயது 65) மனைவி கலையரசி, மகள்கள் ஹரிதா ( வயது 18), கௌசிகா (வயது 17) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

இதில் ஹரிதா பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கெளசிகா பத்தாம் வகுப்பு படித்துள்ளாா். இந்நிலையில் நெகமம் கம்பளாங்கரையைச் சோ்ந்த அபிஷேக்கும் ( வயது 24), கௌசிகாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணம் செய்து வைக்க மறுப்பு

அபிஷேக் தனது பெற்றோருடன் கௌசிகாவின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளாா். ஆனால், கௌசிகாவுக்கு திருமண வயது பூா்த்தியாகவில்லை என்பதால், தற்போது திருமணம் செய்து தர இயலாது என்றும், உரிய வயது வந்த பிறகு இது குறித்துப் பேசலாம் என்றும் சிறுமியின் பெற்றோா் மறுத்து விட்டனா்.

தொடா்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கௌசிகாவை அபிஷேக் வற்புறுத்தி வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள் கிழமை இரவு கௌசிகாவின் வீட்டுக்குச் சென்ற அபிஷேக், மீண்டும் திருமணம் குறித்துப் பேசியுள்ளாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌசிகாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனைத் தடுக்க வந்த பாட்டி திருமாத்தாள் மற்றும் கௌசிகாவின் சகோதரி ஹரிதா (18) ஆகியோரையும் அபிஷேக் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தீவிர சிகிச்சை - உயிரிழப்பு

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், கௌசிகா மற்றும் திருமாத்தாள் ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். கையில் காயம் அடைந்த ஹரிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெகமம் காவல் துறையினா், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். தப்பியோடிய கொலையாளி அபிஷேக்கைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget