நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுவது ஏன் ? - ஜெயக்குமார் கேள்வி
யார் வேண்டுமானாலும் வரட்டுமே களத்தில் சந்திப்போம் என தைரியம் இருக்க வேண்டும். திமுகவுக்கு அந்த தைரியம் இல்லை.
![நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுவது ஏன் ? - ஜெயக்குமார் கேள்வி ADMK Jayakumar says Why is DMK afraid of actor Vijay - TNN நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுவது ஏன் ? - ஜெயக்குமார் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/03/b7041582809f8e6ff6fa61de4716e165_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் பகுதியில் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்:
கடந்த ஆண்டு கார் ரேஸ் நடத்த செலவிடப்பட்ட 48 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டதா?. இந்த ஆண்டு நடத்தப்பட்டதற்கான செலவுகள் என்ன ? என்பது குறித்த வெளிப்படை தன்மை இல்லை.
அதிமுகவில் இரண்டரை கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு , அவர்களுக்கு உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை எழுச்சியாக தொண்டர்களோடு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் எழுச்சியாக இருக்கும்.
ஃபார்முலா 4 கார் ரேஸ் சென்னைக்கு வெளியே நடத்தி இருக்கலாம். சென்னையில் நடந்ததால் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய துறைகள் ரேஸ் பணியில் கவனம் செலுத்தினார்கள்.சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது , மழை நீர் வடிகால் பணிகள் முதிக்கப்படாமல் உள்ளது இதில் கவனம் செலுத்த தவறி விட்டார்கள். பத்தாயிரம் பேர் மகிழ்ச்சி அடைய 10 லட்சம் பேரை சிரமத்திக்குள்ளாக்கி விட்டார்கள். திரை பிரபலங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என செயற்கையாக கார் ரேஸ் நடத்தியதை புகழ்ந்தார்கள்.
கர்நாடக துணை முதலமைச்சர் தமிழகம் வந்துள்ள இந்த சுழலில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருந்திருக்க வேண்டும். அவருடன் மேகதாது பிரச்சனை குறித்து விவாதித்து இருக்க வேண்டும். ஆனால் துரைமுருகன் சிங்கப்பூரில் உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினும் வெளிநாட்டில் உள்ளார்.
அவர்களுக்கு தமிழ்நாடு நலன் குறித்து அக்கறை இல்லை. தமிழகத்தில் ஒரு கபட அரசாங்கம் தான் நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தூங்க மூஞ்சு அரசாங்கமாக செயல்படுகிறது.
மாணவர்கள் குறைவு காரணமாக மாநகராட்சி பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மாணவர்கள் ஏன் குறைந்தார்கள் என்பதை ஆய்வு செய்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்
அமைச்சர் நேரு பேச்சு குறித்து ஜெயக்குமார் கருத்து ;
முருகன் மாநாடு நடத்தியது திமுக கூட்டணி கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. 2026 தேர்தலில் இப்போது உள்ள திமுக கூட்டணி நிலைக்காது. பாஜகவை திருப்திப்படுத்த முருகன் மாநாடு நடத்தியது கள நிலவரத்தை உணர்ந்து தான் நேரு பேசியுள்ளார். விஜயை கண்டு திமுக பயப்படுவது ஏன் ? விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுகவுக்கு தான் பாதிப்பு என அவர்கள் நினைக்கிறார்கள்.2026 தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக தான் மக்கள் வாக்களிப்பார்கள். திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு தான் வரும். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரட்டுமே களத்தில் சந்திப்போம் என தைரியம் இருக்க வேண்டும். திமுகவுக்கு அந்த தைரியம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)