பற்றி எரியும் அக்னிபாத் திட்டம்... ஆனாலும் மோடிக்கு நன்றி தெரிவித்த அமித் ஷா
நாட்டின் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவதற்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவதற்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் ராணுவ ஆட் சேர்ப்பு திட்டம், இளைஞர்கள் மத்தியில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது விகிதம் குறைக்கப்பட்டு ஓய்வூதியத்திற்கான செலவு குறைக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு போராட்டம் விரிவடைந்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது.
இந்நிலையில், ஆயுதப் படைகளில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் நாட்டின் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் வழங்குவதற்கான அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
"இந்தத் திட்டம் இளைஞர்களிடம் உள்ள திறன்களை மேம்படுத்தி நாட்டில் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தும் இந்த திட்டத்தை முடிவுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடியை நான் பாராட்டுகிறேன்" என்று மத்திய உள்துறை அமைச்சர் தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
“அக்னிபத் திட்டம்" புரட்சிகரமான முன் முயற்சி என்று திரு அமித் ஷா கூறியுள்ளார். வெளிப்படையான நடைமுறை மூலம் பதினேழு வயதிலிருந்து 21 வயது வரையுள்ள இளைஞர்கள் ஆயுதப்படைகளில் சேர்ந்து நாட்டுக்கு சேவையின் நிறைவில் வரியில்லாமல் ரூ.11.71 லட்சம் பெறுதன் மூலம் இவர்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
நாட்டிற்கும் தங்களுக்கும் பொன்னான எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த வாய்ப்பாகும். நரேந்திர மோடியின் தொலைநோக்குள்ள முடிவு இந்தியாவின் இளைஞர்களுக்கு ஒழுக்கம், திறமை, உடல்தகுதி, ஆகியவற்றோடு அவர்களை பொருளாதார ரீதியில் தற்சார்பு உடையவர்களாக மாற்றுவது தற்சார்பு இந்தியா என்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும்" என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.