World Obesity Day | `உலக உடல் பருமன் தினம்’ : உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சைகளை நாடலாமா?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று, `உலக உடல் பருமன் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த தினத்தை `அனைவரும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்’ என்ற நோக்கத்தோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று, `உலக உடல் பருமன் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த தினத்தை `அனைவரும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்’ என்ற நோக்கத்தோடு கடைபிடித்து வருகின்றனர் மக்கள். மேலும், உடல் பருமனோடு வாழும் மக்கள் பெரும்பான்மையின் ஆதரவைப் பெறாமல் இருப்பதோடு, தங்கள் பணியிடங்களிலும், வீடுகளிலும் கிண்டல்களை எதிர்கொள்கின்றனர். எனவே அவர்களின் பிரச்னைகள் பேசப்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையின் பக்கம் அவர்களைத் திரும்பச் செய்ய வேண்டும்.
இந்தியாவில் சுமார் 13 கோடி பேருக்கும் மேல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை கிராமப்புறம், நகர்ப்புறம் என்பதில் தொடங்கி, பல்வேறு மாநிலங்களின் அடிப்படையில் மாற்றம் கொண்டிருக்கிறது.
உடல் பருமனாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள்...
உடல் பருமனாக இருப்பதால் அது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாகவும், இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்சனைகள், கீல்வாதம், கர்ப்பப் பிரச்னைகள் முதலானவை ஏற்படக் காரணமாக அமைகிறது.
உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகள் விரைவில் மரணம் ஏற்படக் காரணமாக அமையலாம் அல்லது வாழ்க்கையின் தரத்தைக் கடினமாக மாற்றலாம். எனவே உடலின் எடையைக் குறைப்பதற்கான சரியான வழி என்பது அனைத்து ஊட்டச்சத்துகளும் சேர்க்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடற்பயிற்சி மேற்கொள்வது முதலானவை ஆகும், எனினும், அதிகளவில் பருமனாக இருப்பவர்களும், இந்த முறைகளில் எடையைக் குறைக்க முடியாவதவர்களும் உடல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை அளிக்கின்றனர். மேலும் இந்த அறுவை சிகிச்சைகளால் எடை குறைவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியமான நிலைக்குத் தானாகவே திரும்பும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
.
நீரிழிவு நோய் சுமார் 80 சதவிகித அளவிலும், உயர் ரத்த அழுத்தம் சுமார் 70 சதவிகித அளவிலும் குறைவதோடு, உடலில் உள்ள கொழுப்பு அளவுகள் சராசரி அளவுகளுக்கு மாறுகின்றன. பெண்கள் உடல் எடையைக் குறைத்தவுடன் அவர்களின் கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளும் குறைகின்றன. எனவே அதிகளவில் எடையுடன் இருப்பவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள், தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறந்த மயக்க மருந்து முதலானவற்றின் காரணமாக எடை குறைப்பு அறுவை சிகிச்சை வளர்ந்திருப்பதோடு, அதில் ஏற்படும் ரிஸ்க் வெறும் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவுடன், நோயாளி உடனே உடல் நலமடைகிறார். அவருடன் நல்ல ஊட்டச்சத்து நிபுணர்க் குழு, பிசியோதெரபிஸ்ட் முதலானவர்களோடு கலந்து ஆலோசித்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகான காலகட்டத்தில் உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )