பணியிடத்தில் பாலின பாகுபாடு...அத்துமீறும் கருத்துகள்... கேஷுவலா சொன்னேன்னு இதையெல்லாம் ஆபீஸ்ல பேசாதீங்க...
சில சமயங்களில், “ஓ... நீங்கள் அப்படிச் சொல்லவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று மறைமுகமாகக் குட்டு வைத்தோ, அல்லது சம்பந்தப்பட்ட நபரின் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ தெரிவியுங்கள்.
ஆண்களுக்கு நிகர் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் என்னதான் பெரும் உயர்பதவிகள் வகித்தாலும், பாலின பாகுபாடு வேரூன்றி இருக்கும் நம் நாட்டில் casual sexism தொடங்கி பாலின வேறுபாடானது பணி இடங்களையும் விட்டுவைப்பதில்லை.
பொண்ணுதானே, பொண்ணா இருக்கிறதாலதானே இதெல்லாம்.. போன்ற வேரூன்றிப்போன வார்த்தைகள் நிச்சயம் பயன்படுத்தாதீர்கள்..
இந்தியப் பணியிடங்களும் பாலின பாகுபாடும்
பணியிடங்களில் பெண்களை நோக்கி மிக நுட்பமான, மழுப்பலான மற்றும் எளிய வழிகளில் பெண்களை நோக்கி இந்த பாகுபாடுகள் வெளிப்படும். குறிப்பாக இந்தியப் பணியிடங்களில் இந்த பாலினப் பாகுபாடு மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது.
சின்ன சின்ன உரிமைகள் மறுக்கப்படுவது முதல் பணியிட சூழல், ஒருவரது வேலை செய்யும் திறன் என அனைத்திலும், ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் இந்த பாலின பாகுபாடு பாதிக்கக் கூடும்.
எதிர்கொள்வது, சமாளிப்பது எப்படி?
இந்நிலையில் casual sexism எனப்படும் இந்த பாலின பாகுபாடு, அத்துமீறல்களை பணியிடங்களில் எதிர்கொள்வது, இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து இண்டர்வீவ் கன்சல்டிங் (Interweave Consulting believes early socialisation) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் நிர்மலா மேனன் பேசியுள்ளார்.
தொன்மைத்தன்மை வாய்ந்த நம் நாட்டில் பல நாடுகளுக்கும் முன்னதாகவே ஏற்பட்ட சமூகமயமாதல், பாலினம் சார்ந்த நமது அணுகுமுறைகளில் மிக முக்கியமான ஒரு காரணியாக இருக்கலாம் எனக் கூறுகிறார் நிர்மலா.
"ஆண்களிடமிருந்து இத்தகைய பாலின பாகுபாடு சார்ந்த கருத்துகள் வெளிப்படுவது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் இத்தகைய கருத்துகள் மிகவும் இயல்பாக்கப்பட்டு, பெண்களாலும் இவற்றை அடையாளம் காண முடியாத நிலை இங்கே உருவாகி உள்ளது.
’ஆண்கள், பெண்கள் இருவரும் முன்வர வேண்டும்'
இருப்பினும், இன்றைய நவீன உலகில், கல்வியும், வெளி உலகை அணுகும் வசதிகளும் பெற்றோரால் ஏற்படுத்தி தரப்பட்டு, சரியான பணியிட நடத்தைகளை கற்க வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. எனவே பாலின வேறுபாடு சார்ந்த அணுகுதலுக்கு இனியும் வளர்ப்பை ஒரு காரணமாகக் கூற முடியாது. ஆண்களும் பெண்களும் இத்தகைய செயல்களைக் கண்டிக்க முன்வர வேண்டும்” என்கிறார் நிர்மலா.
பணியிடங்களில் பாலின பாகுபாடு சார்ந்த கருத்துகளை ஊக்குவிக்காமல் அவற்றைத் தவிர்ப்பதற்கான டிப்ஸ்களையும் வழங்குகிறார் நிர்மலா.
சுட்டிக்காட்டுங்கள்...
பணியிடங்களில் நடைபெறும் பாலின பாகுபாடுகளை சமாளிப்பதற்கான சிறந்த வழி, அவற்றை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுவது தான். நமது சமூக-கலாச்சார சூழலில் இவை இரண்டறக் கலந்து இருப்பதால், மக்கள் இதனை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
நீங்களும் இந்த சமூகத்தின் வெளிப்பாடாக, இயல்பாக இத்தகைய எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியவராக இருந்தால், உடனே மன்னிப்பு கேட்டு விடுங்கள். மீண்டும் அத்தகைய தவறை செய்யாதீர்கள்.
பணியிடத்தில் பாலின பாகுபாடுகளுக்கு பலிகடாவாகவோ அல்லது இலக்காகவோ இருந்தால், சூழலுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அதனைக் கையாளுங்கள்.
சில சமயங்களில், “ஓ... நீங்கள் அப்படிச் சொல்லவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று மறைமுகமாகக் குட்டு வைத்தோ, அல்லது சம்பந்தப்பட்ட நபரின் கருத்தை நீங்கள் பாராட்டவில்லை என்றோ தெரிவியுங்கள்.
கடந்துபோகாமல் உரையாடுங்கள்...
சில நேரங்களில் இத்தகைய நபர்களுடன் ஆரோக்கியமாக உரையாடுவது அவர்களின் போக்கையே கூட மாற்றலாம். எனினும், மீண்டும் மீண்டும் இத்தகைய போக்கு தொடர்ந்தால், வலுவான கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால் இவற்றை கவனிக்காமல் அப்படியே கடந்துவிடக்கூடாது.
அதேபோல் இதுபோன்ற பாலின பாகுபாடு காட்டும் பணியிட செயல்பாடுகளை அமைதியாக கவனிப்பது, பாதிக்கப்படுவதைக் காட்டிலும் பிரச்னைகளில் தலையிட்டு கருத்து சொல்வது பெரும்பாலும் எளிமையானது. அதேபோல் சூழ்நிலையைப் பொறுத்து, நகைச்சுவையாகவும் இத்தகைய செயல்பாடுகளை நீங்கள் எதிர்கொள்ளலாம்.
"எல்லாப் பெண்களையும் நீங்கள் குறிப்பிடவில்லை என்று நான் நம்புகிறேன்..." என்பன போன்ற பதில்களை முன்வைத்தால், ’நாம் கூறியது தவறான கருத்து’ என எதிரில் இருப்பவர்களை உணர வைக்கும். நீங்கள்தான் உங்களுக்காக பேசவேண்டும்
ஆண்கள் இத்தகைய செயல்பாடுகளை குறைத்துக் கொள்ள டிப்ஸ்:
நாம் அனைவரும் பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள் மற்றும் நமது சொந்த சமூக-கலாச்சார பின்னணியில் நாம் பலவற்றை சுமந்து கொண்டு இருக்கலாம்.
எனவே, முதல் விஷயம் என்னவென்றால், பாலின பாகுபாடு என்றால் என்ன, அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு, கொள்கைகளை உருவாக்கிக்கொண்டால், இவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளை நாமே கண்டுபிடிக்கலாம்.
அதேபோல் நீங்கள் இத்தகைய கருத்துகள், செய்கைகளை வெளிப்படுத்தினால் அதை சுட்டிக்காட்டும்படி உங்களது நம்பகமான நண்பர்களிடம் தெரிவித்து வைத்து சரி செய்து கொள்ளலாம்.
பாலின பாகுபாடு சார்ந்த இத்தகைய உங்களது கருத்துகளை ஒருவர் தொடர்ந்து சுட்டிக் காண்பித்து வந்தால், நீங்களாகவே அதனை வெளிப்படுத்துவதை நிறுத்திவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் நிர்மலா.
பாலின ரீதியாக பெண்களை இழிவுபடுத்தும் கமெண்ட்டை ஒருபோதும், எப்போதும் செய்யாதீர்கள்..