Health: காலை உணவுல இது ரொம்ப அவசியம்.. நார்ச்சத்து நிறைஞ்ச உணவுகள் என்னென்ன?
Health: காலை உணவில் நார்ச்சத்து இருப்பது ஏன் முக்கியம் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவும் மிகவும் அவசியமானது. குறிப்பாக காலை உணவு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துகள் காலை உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நார்ச்சத்து ஏன் முக்கியம்?
மற்ற ஊட்டச்சத்துகளை போல நார்ச்சத்தின் முக்கியத்துவம் அவ்வளவாக தெரிவதில்லை. உடலின் செரிமான அமைப்பு மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க நார்ச்சத்து உதவுகிறது. இருப்பினும், காலை சாப்பிடும் உணவுகளில் அதிக நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.நமது காலை உணவில் சேர்ப்பது முக்கியமா? இதைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் என்ன சொல்கிறார் என்பதைக் காணலாம்.
காலை உணவு பெரும்பாலும் அன்றைய தினத்திற்கான ஆற்றலை தரக்கூடிய மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. காலை உணவில் நார்ச்சத்தை தவிர்ப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். குடல் ஆரோக்கியத்திலும் நார்ச்சத்து மிகவும் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை உணவில் எளிதாக நார்ச்சத்து சேர்க்கலாம். காலை உணவுடன் ஒரு தேக்கரண்டி சியா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். இது சிறய அளவுதான். ஆனால், ஊட்டச்சத்து நிறைந்தது. 3-5 கிராம் நார்ச்சத்து இதில் அடங்கியுள்ளது. சியா சீட்ஸில் நார்ச்சத்து உடன் அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன.
செரிமான மண்டலாம் ஆரோக்கியமாக இருக்க காலை உணவில் நார்ச்சத்து சேர்ப்பது மிகவும் முக்கியம்.
தானிய வகை உணவுகள்:
உணவில் அதிக தானியங்களைச் சேர்க்கவும். நார்ச்சத்து நிரம்பிய ப்ரவுன் ரைஸ், கினோவா, முழு கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தா வகைகள், ஓட்ஸ் போன்ற முழு தானியங்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும். இவை உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைப்பதுடன் செரிமானத்திற்கும் உதவும். செரிமான பிரச்சனைகளை தடுக்கும்.
பழங்கள்:
காலை உணவில் அதிக நார்ச்சத்து இருக்கும் பழங்களை சேர்க்கவும். ஆப்பிள், ஆரஞ்சு, பெர்ரி, கேரட்,கீரை வகைகள் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றை உங்கள் உணவில் சேர்ப்பது நல்லது.
நட்ஸ் & சீட்ஸ்:
காலை உணவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். நட்ஸ், சீட்ஸ் வகைகளை காலை உணவில் இருக்கட்டும். காலை உணவு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு பசி எடுத்தால் அப்போ நட்ஸ் ஷேக், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். நட்ஸ் வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்பு இருக்கிறது. நட்ஸ் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது.
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளை சாப்பிடலாம். காலை உணவில் சாம்பார், Daal உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். பருப்பு வகைகள் dietary fibres நிறைந்துள்ளது. சூப் வகைகள், சாலட், கிரேவி அல்லது சான்ட்விச் மற்றும் ஆகியவற்றில் சேர்க்கலாம்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.