(Source: ECI/ABP News/ABP Majha)
வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகளும் விளைவுகளும்: தெரிந்து கொள்ள வேண்டியவை!
குளிர்காலம் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைக் கையோடு கொண்டுவருகிறது. இதற்கு நம்மில் பெரும்பாலோர் பின்பற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் வெந்நீராகும். வெந்நீர் உட்கொள்வதால் நாசி நெரிசலை நீங்குகிறது, செரிமானத்தை மேம்படுகிறது,
தண்ணீர் தான் உயிரின் ஆதாரம். தண்ணீர் தான் உயிரின் அமிர்தம் என்றெல்லாம் கூறினாலும் அது மிகையாகாது. மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் தான் இருக்கின்றது. தண்ணீர் அருந்துவது அவசியம் என்று அதனால் தான் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் தண்ணீர் எவ்வளவு அருந்தலாம் எப்படி அருந்தலாம் என்பதற்கெல்லாம் வழிமுறைகள் இருக்கின்றன.
சூடான நீரை குடிப்பது நமது செரிமான மண்டலத்தை தூண்ட உதவுகிறது. குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கவும் சூடான நீர் உதவுகிறது. சூடான நீர் பருகுவதால் உடலின் வெப்பம் அதிகரித்து வியர்வை உண்டாகிறது, அந்த வியர்வையின் மூலம் நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் புத்துணர்வு பெறுகிறது. ஆனால் எப்போதுமே சூடான தண்ணீர் அருந்தலாமா என்று கேட்டால் வேண்டாம் என்றே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குளிர்காலம் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைக் கையோடு கொண்டுவருகிறது. இதற்கு நம்மில் பெரும்பாலோர் பின்பற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் வெந்நீராகும். வெந்நீர் உட்கொள்வதால் நாசி நெரிசலை நீங்குகிறது, செரிமானத்தை மேம்படுகிறது,
சளியைக் குறைக்கிறது, மேலும் உங்களை நீரிழப்பில்லாமல் வைத்திருக்கிறது. ஆனால் வெந்நீரை அதிகமாக உட்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை கைவிட வேண்டிய நேரம் இது. அதிக அளவு சூடான, கொதிக்கும் நீரை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
வெந்நீர் குடிப்பதின் எதிர்மறை விளைவுகள்
வெந்நீரை அதிகளவில் குடிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். கொதிக்கும் திரவம் உங்கள் உதடுகளையும் உங்கள் வாயின் உட்புறங்களையும் எளிதில் உரிக்க முற்படும். இதன் விளைவாக சிறிய, இருப்பினும் கடுமையான தீக்காயங்கள் உதடுகளிலும் வாய் உட்புறங்களிலும் ஏற்படும்.
சூடான உணவை உண்பதும், அதிக அளவு சூடான நீரை குடிப்பதும் குரல்வளையில் எரியும் காயங்களுக்கு வழிவகுக்கும். இச்சேதத்திற்குப் பிறகு, 6 முதல் 24 மணி நேரத்திற்குள் எடிமா (உடல் திசுக்களில் சேரும் அதிக நீரின் காரணமாக வீக்கம் உண்டாகும் நிலையை எடிமா என்பர்) உச்சத்தை அடைகிறது. தோல் செல்கள் கணிசமாக பாதிக்கப்படுகின்றன. மேலும், அதிக வெப்பநிலையினால் திசுக்களில் பெரியளவிலான வடுக்கள் ஏற்படும் . இதில் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்படும்
நீங்கள் குழாயிலிருந்து நேரடியாக கொதிக்கும் தண்ணீரைக் குடிப்பதாயிருந்தால், முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது. குழாயில் இருந்து வெளியேறும் நீர் மாசுபடுத்தப்பட்டதாக இருக்கலாம். குழாய்கள் பழையதாகவோ துருப்பிடித்ததாகவோ இருந்தால், ஈயத்தின் நச்சினால் ஏற்படும் அபாயங்கள் அதிகம். இதுமட்டுமன்றி, இந்த மாசுகள் குளிர்ந்த நீரில் இருப்பதைப் போலல்லாமல், வெந்நீரில் விரைவாகக் கரையக்கூடியவை. இவை நீங்கள் குடிக்கும் நீரை அரித்து, மாசுபடுத்தும் ஆற்றல்/வல்லமை கொண்டவை.
மிதமான சூடு: கொதிக்கும் வெந்நீரை நேரடியாகக் குடிப்பதற்குப் பதிலாக, தண்ணீரை சிறிது நேரம் மட்டுமே சூடுபடுத்தலாம். பானையில் இருந்து நீராவி வெளியேறியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரைக் குடிக்கவும். இந்த வெதுவெதுப்பான நீர் நீங்கள் குடிப்பதற்கு சரியான வெப்பநிலையாக இருப்பதனால் எவ்விட்த உட்சேதங்களையும் ஏற்படுத்தாது.
நீர் வடிகட்டி: குழாயிலிருந்து தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீர் வடிகட்டிகளைப் பயன்படுத்துவது வேண்டும். இதனால் அனைத்து மாசுகளும் பாக்டீரியாக்களும் அகற்றப்பட்டுசுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பருகப் பெறுவீர்கள்.