மேலும் அறிய

Belly Fat Fact: திருமணத்திற்கு பின் ஆண்களுக்கு தொப்பை விழ உடலுறவு காரணமா? ஓர் அலசல்

Belly Fat Fact: திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான ஆண்களுக்கு எடை கூடுதல் மற்றும் தொப்பை ஏற்படுவது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Belly Fat Fact: திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான ஆண்களுக்கு எடை கூடுதல் மற்றும் தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எடை கூடுதல் & தொப்பை பிரச்னை:

எலும்பும் தோலுமாய் நம் கண் முன் சுற்றிக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம், திருமணத்திற்கு பின் அவனாடா நீ என ஆச்சரியப்படும் வகையில் அடையாளம் தெரியாமல் மாறிப் போவதெல்லாம் நமது ஊரில் சர்வ சாதாரணம். அதேநேரம், கட்டுமஸ்தான உடலாக இருந்தவர்கள் எல்லாம், தொப்பையை வளர்த்துக் கொண்டு திரிவதும் இப்போது சர்வ சாதாரணமாகவிட்டது. அதற்கு காரணம் என்ன? இதற்கு உடலுறவும் ஒரு காரணமா? என்பதை போன்ற விவரங்களை சற்றே விரிவாக அலசலாம்.

திருமணத்திற்குப் பின் ஆண்கள் எடை கூடுவது ஏன்?

திருமணத்திற்குப் பிறகு, மக்கள் பாதுகாப்பான உணர்வைப் பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகிறார்கள். இந்த காரணம் மக்களில் எடை அதிகரிப்புக்குப் பின்னால் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு உறவில் இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது, ​​தனிமையில் இருப்பவர்கள் குறைவாகவே உணவு உட்கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்பதால், கலோரி உட்கொள்ளல் இயற்கையாகவே அதிகமாகும்.

மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான உறவு உண்மையில் பசியை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. அதேநேரம், மகிழ்ச்சியான உறவின் காரணமாக  வழக்கத்தை விட அதிகமாக உண்பதை ஆண்களும் பெண்களும் அறிந்திருக்க மாட்டார்கள் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தந்தையாவதும் உடல் எடை அதிகரிப்பில் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.  பலர் உடற்பயிற்சியை கைவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்படும் தொப்பையை, “HAPPY FAT”  என குறிப்பிடுவது மேற்கத்திய நாடுகளில் வழக்கம். அதேநேரம், திருமணத்திற்குப் பிறகு எடையை அதிகரிப்பை கட்டுப்படுத்த,  உங்கள் உணவு பழக்கத்தில் கவனத்தில் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சிறிதளவு வழக்கமான உடற்பயிற்சிகள் உங்கள் உடல் நலனுக்கு அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலுறவும் & எடை அதிகரிப்பு உண்மைகளும்:

திருமணத்திற்குப் பிறகு உடலுறவு காரணமாக உடல் எடை அதிகரித்து விடுகிறது என்ற பொதுவான நம்பிக்கை,  ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் நிலவுகிறது.  ஆனால், உடலுறவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். காரணம் அதை உறுதிப்படுத்த உடலியல் காரணங்கள் எதுவும் இல்லை என கூறுகின்றனர். அதேநேரம், உடலுறவு உடல் எடையை குறைக்க உதவுமா என்றால்? ஆம் என்பதே உண்மை.  30 நிமிட உணர்ச்சிகரமான உடலுறவில் சராசரியாக 100 கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே ஒருவர் உடலுறவில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவரால் எடையை குறைக்க முடியும்.

முதல் 5 வருடங்கள் முக்கியம்..!

இந்நிலையில் தான் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.  1989 முதல் 2015 வரையிலான தரவுகளை பகுப்பாய்வு செய்தில், திருமணமான முதல் ஐந்து ஆண்டுகளில் ஆண்கள் பெரும்பாலும் எடை அதிகரிக்கத் தொடங்குவது தெர்யவந்துள்ளது. 5.2 சதவீத ஆண்கள் அதிக எடையும், கூடுதலாக 2.5 சதவீதம் பேர் பருமனாகவும் மாறுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில், உடல் பருமனின் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஆண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே திருமணத்திற்குப் பிறகு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பேணுவதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் அவர்கள் தங்கள் உடல்நலனை பராமரித்திட வேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Embed widget