மேலும் அறிய

டெங்கு வைரஸ் தொற்று பரவலை தடுப்பது எப்படி? - நிபுணர் சொல்லும் அட்வைஸ் இதோ!

டெங்கு பாதிப்பு, தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரைகளை காணலாம். டெங்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான பொதுவான அறிவுரைகள் வழங்குகிறார்  மருத்துவ ஆலோசகர் மாலதி. 

மழை மகிச்சியையும் சேர்த்து பருவகால நோய்களையும் தரும் வாய்ப்புகள் அதிகம். மழை கால தொற்று நோய்களில், டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை எப்படி இருக்கும்? டெங்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான பொதுவான அறிவுரைகள் வழங்குகிறார்  மருத்துவ ஆலோசகர் மாலதி. 

டெங்கு காய்ச்சல்

டெங்கு தொற்று கொசு கடியால் பரவும். குறிப்பாக ஈடிஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் டெங்கு தொற்று பரவும்.இதனாலேயே பகலில் கொசு கடிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். கவனுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

அறிகுறிகள் என்ன?

டெங்கு காய்ச்சல் ஏற்படால் அறிகுறிகள் குறித்து விளக்குகையில், “ எல்லா நோய் தொற்றிற்கும் பொதுவான அறிகுறி காய்ச்சல்,தலைவைலி, உடல்சோர்வு, வாந்தி ஆகியன. டெங்கு தொற்று ஏற்பட்டிருந்தால் ஐந்து நாட்கள் காய்ச்சல் இருக்கும். அதன்பிறகு, உடம்பில் சிறிய சிகப்பு புள்ளிகள் ஏற்படலாம். ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல்; உள் உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படலாம். இது தீவிர டெங்கு தொற்றின் அறிகுறிகள். இதற்கு பெயர் ‘Dengue Hemorrhagic Fever' அல்லது ‘Dengue Shock Syndrome'. இது தீவிர தொற்றின் அறிகுறி. எல்லாருக்கும் தீவிர நிலை வராது. குழந்தைகளுக்கு வரலாம். ஏற்கனவே டெங்கு பாதிப்பு ஏற்படும் மீண்டும் தொற்று பாதிப்பு உண்டாகினால் தொற்று தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்." என்று எச்சரிக்கிறார். 

  • முதல் இரண்டு தினங்களுக்கு  உடல் சோர்வு, தலைவலி ஆகிய தொந்தரவுகள் இருக்கும்.
  • காய்ச்சல் தொடர்ந்து பல நாள்கள் இருக்கும்.
  • உடல் வெப்பநிலை 104 டிகிரி வரைகூட உயரலாம்.
  •  குமட்டல், வாந்தி ஏற்படும்.
  • வயிற்று வலி ஏற்படலாம்.
  • தாங்க முடியாத அளவுக்கு உடல் வலி, மூட்டு வலி, தசை வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.
  • தோலில் சில சிவப்பு நிறத் தடிப்புகள் (Rash) தோன்றலாம். இது நோயின் தீவிரமான ஸ்டேஜ்
  •  காய்ச்சல் 2 முதல் 7 நாள்கள் வரை நீடிக்கும்.

டெங்கு ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி?

டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது ஒன்றே வழி என்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,” டெங்கு காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசியோ அல்லது சிறப்பு மருந்தோ ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. தென்னாபிரிக்க நாடுகளில் மட்டும் ட்ரல் முறையில் உள்ளது. அதனால், டெங்கு ஏற்படானல் பாதுகாப்பதே உகந்தது.” என்கிறார்.

டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் என்ன செய்ய  வேண்டும்?

” டெங்கு காய்ச்சல் இரத்தப் பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்படும். தொற்று பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் அதற்கு மாத்திரை வழங்கப்படும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படும். தொற்று அறிகுறி இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.” என்று அறிவுறுத்துகிறார்.

டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து மருத்துவ ஆலோசகரின் அறிவுரைகளை காணலாம்.

தடுக்கும் வழிமுறைகள்?

  • குழந்தைகள், பெரியவர்கள் என பாகுபாடின்றி முழு கையுடன் இருக்கும் உடைகளை அணிந்து செல்லவும்.
  • வெள்ளை நிற ஆடைகளை அணியலாம். கருப்பு உள்ளிட்ட அடர் நிற உடைகள் அணிவதை தவிர்க்கவும். 
  • கொசு கடிக்காமல் இருக்க க்ரீம்களை தடவலாம்.
  • குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத அளவுக்கான க்ரீம்கள் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தலாம். 

தொற்று உறுதிசெய்யப்பட்டால். நிறைய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரம் அவசியம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். மூலிகை சூப் அருந்தலாம்.  லஸ்ஸி, மோர் கூட அருந்தலாம். இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. அதிலுள்ள எலக்ட்ரோலைட்கள் ப்ளேட்லட் அளவை உயர்த்தும். இவை உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget