பெண்களை தாக்கும் சாக்லேட் நீர்க்கட்டிகள்... அறிகுறிகள், சிகிச்சை மற்றும் காரணங்கள் என்ன?
Chocolate Cyst: சாக்லேட் நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று எண்டோமெட்ரியோசிஸ். பெண்ணின் எந்த ஒரு இனப்பெருக்க உறுப்புகளிலும் இந்த நீர்கட்டிகள் உருவாகலாம்.
Endometriotic cyst: பெண்களை தாக்கும் சாக்லேட் நீர்க்கட்டிகள்... அறிகுறிகள், சிகிச்சை மற்றும் காரணங்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
சாக்லேட் நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று எண்டோமெட்ரியோசிஸ். பெண்ணின் எந்த ஒரு இனப்பெருக்க உறுப்புகளிலும் இந்த நீர்கட்டிகள் உருவாகலாம். இருப்பினும் முக்கியமாக பாதிக்கப்படுவது கருப்பைகள். சாக்லேட் நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிக வலி, உடலுறவின் போது வலி மற்றும் செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
பொதுவாக இனப்பெருக்க வயது மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களுக்கு இந்த சாக்லேட் நீர்க்கட்டிகள் இருக்கக்கூடும். இது எண்டோமெட்ரியோடிக் நீர்க்கட்டி என்று மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது. கருப்பையில் நிறைந்து இருக்கும் பழைய ரத்தம் கருப்பையின் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் கருவுறாமைக்கு கூட வழிவகுக்கலாம்.
சாக்லேட் நீர்க்கட்டிகள் உருவாக கரணங்கள்:
25 முதல் 40 வயதிற்குள் இருக்கும் எந்த பெண்ணிற்கும் மாதவிடாய் காலத்தில் எண்டோமெட்ரியோசிஸ் உருவாகலாம். மாதவிடாய் காலத்தில் ரத்தம் பாயும் போது சில சமயம் ஃபலோபியன் குழாய்களில் திரும்பி பாய்ந்து கருப்பை அல்லது கருப்பையின் சுவர்களில் அல்லது சுற்றுப்புறங்களில் படிந்து சிறிய விதைகள் போல இருந்து பிறகு பெரிதாக வளர்ந்து நீர்கட்டிகளாகலாம். இதற்கு முக்கியமான உறுப்பான கருப்பையில் நுழைந்து ரத்தத்தை வெளியேற்றுகிறது. ரத்தம் வெளியேற இடம் இல்லாததால் படிப்படியாக குவிந்து நீக்கட்டிகளை உருவாக்குகிறது. நீர்கட்டிகளில் ரத்தம் அதிக நேரம் ரத்தம் இருந்தால் அவை பழுப்பு நிறமாகவும் சாக்லேட் நிறமாகவோ மாறிவிடும். அதனால் இவை சாக்லேட் நீர்க்கட்டிகள் என கூறப்படுகின்றன. பெண்களுக்கு இந்த நிலைமை உருவாக மரபியலும் ஒரு காரணமாகும்.
பிசிஓஎஸ், தைராய்டு மற்றும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கருவுறுதல் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது போன்ற பல பிரச்சனைகளால் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி சாக்லேட் நீர்க்கட்டிக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சினை ஆரம்ப நிலையில் கவனிக்கப்படாமல் இருந்தால் நாளடைவில் நோய்த்தொற்றாக மாறி மற்ற திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கும் பரவி கருப்பையை மேலும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
அறிகுறிகள்:
வலிமிகுந்த மாதவிடாய், கடுமையான இடுப்பு வலி, செரிமான பிரச்சனை, உடலுறவின் போது வலி, வலிமிகுந்த குடல் இயக்கங்கள், கருத்தரிப்பதில் சிரமம் போன்றவை இந்த சாக்லேட் நீர்க்கட்டிகளின் அறிகுறிகள். இதன் நிலைமையை கண்டறிய கருப்பையின் அல்ட்ராசவுண்ட் அவசியம். திசுக்கள் பரிசோதனை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நீர்க்கட்டிகளை கூட அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம். யோனி அல்ட்ராசவுண்ட் அல்லது எக்ஸ்ரே இந்த நீர்க்கட்டியை பற்றி கண்டறிய உதவும். சில சமயங்களில் ஊசி பயாப்ஸி பரிந்துரைக்கப்படலாம்.
சிகிச்சை முறை:
சாக்லேட் நீர்க்கட்டிக்கான சிகிச்சை வயது மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து மாறுபடும். கருவுறாமை போன்ற அறிகுறிகள் இருப்பின் நீர்க்கட்டியை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.ஒரு பெண் IVF க்கு திட்டமிட்டு இருந்தால் நீர்க்கட்டி அகற்றுதல் செயல்முறை மிகவும் சவாலானது மற்றும் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் குறைவாகும். எனவே ஒரு சுகாதார நிபுணர் அல்லது கருவுறுதல் நிபுணரின் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )