Healthy Metabolism: உடலில் மெட்டபாலிஸம் பாதிப்பா? சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
Healthy Metabolism: உடலில் மெட்டபாலிஸம் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கீழே விரிவாக காணலாம்.
மனித உடலின் மெட்டபாலிசத்தின் தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் விசயங்கள் குறித்து மருத்துவர்களின் விளக்கங்களை காணலாம்.
மெட்டபாலிஸம் ( Metabolism )
மெட்டபாலிஸம் என்பது நாம் சாப்பிடும் உணவு உடலில் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை குறிப்பதாகும். நாம் சாப்பிடும் உணவு நம் உடலில் எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதே மெட்டபாலிஸம்.
மெட்டபாலிஸம் மேம்பட ஒரே நாளில் ஏதும் செய்துவிட முடியாது. சில பழக்கத்தை தவறாமல் பின்பற்றினால் மட்டுமே மெட்டபாலிஸம் சீராக இருக்க உதவும். உடல் எடை குறைப்பது, உடலுக்கு தேவையான ஆற்றலை எடுப்பது போன்றவைதான் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதோடு, மெட்டபாலிஸம் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாக மருத்துவ உலகம் சிலவற்றை குறிப்பிடுகிறது. அதில் முதன்மையானது. மன அழுத்தம் (Stress).
மன அழுத்தம் நீங்க உடலுக்கு தேவையான ஓய்வு, சத்துக்கள் என எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும். உடலிலுள்ள நச்சுக்களை அடிக்கடி வெளியேற்ற வேண்டும். இது தொடர்பாக மருத்துவ நிபுணர் கிறிஸ்டினா தெல்ஹாமி கூறுகையில் மனதை அமைதியாக வைத்துகொள்ள பழக்க வேண்டும். உங்களுக்குள் எவ்வளவு மன அழுத்தம் ஏற்படுமோ அது மெட்டபாலிஸம் மோசமாக பாதிப்படைந்துவிடும்.
- உடற்பயிற்சி செய்யாமையும் ஒரு காரணம். குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். போதுமான தூங்கவில்லை என்றால் மெட்டபாலிஸம் சீராக இருக்காது.
- காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் மாற்றிகொள்ளுங்கள்.
சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது. இதற்குக் காரணம், நீங்கள் தூங்கிய பிறகு, பெரும்பாலான உடல் உறுப்புகள் அசையாமல் வேலை செய்வதை நிறுத்திவிடும். அத்தகைய சூழ்நிலையில், தூக்கத்தின்போது செரிமான செயல்முறை தடைபடுகிறது, இதன் காரணமாக உணவை ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. உணவு சாப்பிட்டு உறங்குபவர்கள், எழுந்த பிறகும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதற்கு இதுவே காரணம்.
உண்மையில் சாப்பிட்டவுடன் தூங்கச் சென்றாலும் அசிடிட்டி உண்டாகும். உணவு உண்டவுடன் செரிமானம் அடைய வயிற்றில் சில ஆசிட்கள் சுரக்கின்றன. செரிமானத்துக்காக வெளியேற்றப்படும் இந்த ஆசிட்கள் நாம் விரைந்து தூங்கச்செல்லும்போது மற்ற எந்த பகுதியும் செயல்படாமல் போகவே உணவுக்குழாயின் மேலேறி இதனால் ஒருவித அழற்சியை உடலில் ஏற்படுத்துகிறது... இனி சாப்பிட்டு சற்று இளைப்பாறிவிட்டுத் தூங்கச் செல்வது நலம்..