Sleeping Position | நீங்க இந்த மாதிரிதான் படுத்து தூங்குவீங்களா? இதுதான் உங்க குணம்.. செக் பண்ணி பாருங்க..
நீங்கள் தூங்கும் நிலை உங்களைப் பாதுகாப்பற்றவராக, தைரியம் மிக்கவராக, அதீத உதவிகளைச் செய்பவராக உங்கள் குணம் என்னவென்பதை உணர்த்தக் கூடியது. உங்கள் தூங்கும் நிலையை வைத்து, உங்கள் குணத்தை மதிப்பிடலாம்.
நீங்கள் உங்கள் கைகளைத் திறந்து, விரித்து உறங்குபவரா? சமயங்களில் குப்புறப் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவரா? நீங்கள் தூங்கும் நிலைகள் உங்கள் குணம் குறித்து தீர்மானம் செய்ய உதவுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தூங்கும் நிலை உங்களைப் பாதுகாப்பற்றவராக, தைரியம் மிக்கவராக, அதீத உதவிகளைச் செய்பவராக உங்கள் குணம் என்னவென்பதை உணர்த்தக் கூடியது. உங்கள் தூங்கும் நிலையையோ, உங்கள் நண்பரின் நிலையையோ வைத்து, உங்கள் குணத்தை மதிப்பிடலாம். அதற்கான பட்டியல் இது.
விளையாட்டுப் பிள்ளை!
நீங்கள் குப்புறப்படுத்து, உங்கள் தலையை ஒருபக்கமாகத் திருப்பி, கைகளைத் தலையணையைச் சுற்றிவைத்து தூங்குபவராக இருந்தால், நீங்கள் அதிகமாக விளையாட்டான குணங்களைக் கொண்டிருப்பவர் என்று பொருள். இது ஸ்கை டைவர் நிலை என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தூங்குவோர் விளையாட்டான குணங்களையும், அதிக சுதந்திரமிக்கவர்களாக உணர்வதோடு, தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கையாளத் தெரிந்தவர்களாகவும் இருப்பர்.
வெளிப்படையான மனிதர்கள்!
உங்கள் கைகளையும், கால்களையும் முழுமையாகத் திறந்து வைத்து, நட்சத்திர மீனின் வடிவத்தில் உறங்குபவர் நீங்கள் என்றால் உங்களுக்கு வெளிப்படைத் தன்மை அதிகம் என்று பொருள். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அதிக ஆதரவை வழங்குபவராக இருப்பதோடு, உங்கள் மீது அதிக கவனம் விழுவதையும் விரும்பாதவராக இருக்க வாய்ப்புகள் உண்டு. இயல்பாகவே கவலையற்ற குணம் கொண்ட இத்தகையோர் சிறந்த தலைவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
உதவும் கரங்கள்!
மேல் நோக்கி வானத்தைப் பார்த்த நிலையில் உறங்குபவரா நீங்கள்? உங்களுக்குள் அதீத உதவி செய்யும் குணம் இருக்கிறது. பின்னந்தலையில் கைகளைக் கட்டிக் கொண்டு, முதுகைப் பயன்படுத்தி, வானில் நட்சத்திரங்களைப் பார்ப்பதுபோல படுத்து உறங்குவோரிடம் நேர்மறையான எண்ணங்கள் அதிகமாக இருப்பதோடு, தாங்கள் விரும்பும் நபர்களிடம் அதிக விசுவாசத்தை வெளிப்படுத்தும் குணமும் உண்டு.
தைரியம் கொண்டோர்!
முழுவதுமாகக் குப்புறப்படுத்து உறங்குவோர் இயல்பாகவே மிக்க தைரியம் கொண்டவர்களாக இருப்பினும், அவர்களால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் பின்னணியில், இப்படியான மனிதர்கள் வெளியில் காட்டிக் கொள்வதைவிட, மனதிற்குள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களால் கடுமையான சூழல்களைக் கையாள முடியாது என்பதோடு, அவர்களின் கடுகடுப்பான குணம் குறித்து அவர்களுக்கே தெரியாத நிலையும் இருக்கலாம்.
காதலும் கனவுகளும்!
நீங்கள் உங்கள் தலையணையையோ, டெடி பியர் போன்ற பொருள்களையோ கட்டிப் பிடித்து உறங்குபவரா? அப்படியாக இருப்பின், நீங்கள் கட்டியணைத்து உறங்கும் பட்டியலில் இடம்பெறப் போகிறீர்கள். இந்த வகையான மனிதர்கள் தலையணையைக் கட்டியணைத்து உறங்கும் போது, மனதளவில் எளிமையாகவும், மன அமைதியை அடைவோராகவும், மிகுந்த அன்புகொண்டோராகவும் இருக்கின்றனர். இப்படியான நபர்கள் சில நேரங்களில் மனதை எங்கெங்கோ அலைபாய விடுவதும் வழக்கமான ஒன்று. பகலில் கற்பனைக் கனவுகளைக் காண்பது இந்த வகை மனிதர்களின் இயல்பு என்ற போதும், உடனடியாகப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று சூழ்நிலை உருவானால், இந்த வகை மனிதர்களைத் தொடர்புகொள்வது சிறந்தது.