Watch Video: சமந்தா மட்டும் வொர்க் அவுட் ஸ்டார்..? நாங்களும்தான்.. ட்ரெண்டிங்கில் வைரல் வீடியோ
ட்ரெட் மில்லில் உடற்பயிற்சி செய்யும் நாயின், வீடியோ வைரல்..
நீங்களா மட்டும்தான் வொர்க் அவுட் மெஷின்களில் உடற்பயிற்சி செய்வீங்களா? நானும் செய்வேன்னு ஒரு நாய் ட்ரெட் மில்-ல (treadmill) வொர்க் அவுட் செய்யுற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்லப்பிராணிகளில் பெரும்பாலானோருக்கு பிடித்தது என்றால் நாய்க்குட்டிதான். நாய்கள் இருப்பதால் வீடு முழுவதும் ஒரு ஆனந்தம் இருக்கும். வீட்டிற்கு பாதுகாப்பு என்பதைவிட, நாய் தன்னை வளர்ப்பவர்கள் மீது அவ்வளவு நேசத்துடன் இருக்கும். குழந்தையை ஆபத்தில் இருந்து காப்பாறிய நாய் என்றெல்லாம் செய்திகளில் படித்திருப்போம். அப்படி, ஒரு வீடியோ இணையத்தில் அனைவராலும் மகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு வீட்டின் முன் ட்ரட் மில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நாய் வொர்க் அவுட் செய்யும் வீடியோ பார்க்க ரொம்பவே ஜாலியாக இருக்கிறது. வேகமாக ட்ரட் மில்லில் வொர்க் அவுட் செய்யும் நாயின் வீடியோவை பார்த்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Just getting in some morning exercise...😂😁🐶 pic.twitter.com/oIfXUfcAvo
— Laughs 4 All 🤟 (@Laughs_4_All) July 4, 2022
பலருக்கும் நாய் என்பது செல்லப்பிராணி என்பதை தாண்டி, அதை குடும்பத்தில் ஒருவராக கருதுபவர்களே அதிகம். அதெற்கென தனி வீடு, தனி உணவு, வாக்கிங் Routine, ஒன்றாக சேர்ந்து தூங்குவது உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நாய்கள் என்றில்லை; எல்லா உயிர்களும் மனிதன் மீது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தும். அதில் முதன்மையானது என்றால், நாய்.. நாய் நன்றியுடன் இருக்கும் என்று சொல்வதுண்டு; ஆம், அதைவிட நாய்கள் எதிர்பாராமல் அன்பை பொழியும்.
நாய் வளர்ப்போர் கவனத்திற்கு....
வீட்டில் இருக்கும் இட வசதிகேற்ப நாய்களை வளர்க்க திட்டமிடுங்கள்.
நாய்களின் செயல்களை கவனியுங்கள். அவர்களின் தேவைக்கேற்ப உணவு உள்ளிட்டவற்றை வழங்குங்கள்.
வயதுக்கேற்ற தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்.
அபார்ட்மெண்ட்களில் பெரிய நாய்கள் வளர்ப்பதை தவிர்க்கலாம். ஸ்மால் பிரீட்ஸ் நல்லது.
நாய்களுக்கு சந்தைகளில் விற்கப்படும் உணவு மட்டுமே போதுமானது அல்ல. அதில் கெமிக்கல் அதிகம் இருக்கும்.
வீட்டிலேயே இயற்கையான மாமிசம் உள்ளிட்ட உணவுகள் நல்லது.
நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வது மிகவும் அவசியம்.
நாய்- ஓர் உயிர் - அதை அதன் விருப்பப்படி வாழ விடுவது அதன் உரிமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்