உங்க முகத்துக்கு ஏற்ற Eyebrow ஸ்டைல் தெரியணுமா? புருவம் அடர்த்தியா இருக்கணுமா? எல்லா டிப்ஸும் இங்க..
புருவங்களின் முடி அடர்த்தியாக வளர விளக்கெண்ணெய்யுடன் ஆலிவ் எண்ணெய், அரோமா எண்ணெய் சமஅளவு கலந்து புருவத்தில் தேய்த்து வரலாம்
பெண்கள் பேசியல் செய்கிறார்களோ இல்லையோ? அனைத்துப் பெண்களும் ஐப்ரோஸ் அதாவது புருவங்களைத் திருத்தம் செய்வதற்கு தவறமாட்டார்கள். ஏனென்றால் பெண்களை எப்போதும் அழகாகப் பிரதிபலிக்க உதவியாக இருப்பது அவர்களின் புருவங்கள் தான். சற்று புருவத்தில் ஏதாவது திருத்தங்களை அதாவது ஐப்ரோஸ் செய்யும் போது சொதப்பினால் கூட நம்மாலே நம்மைப்பார்க்க முடியாது. அந்தளவிற்கு பெண்களின் முக அழகிற்கு எந்தப்பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பது புருவங்கள் தான். ஒருவேளை நீங்கள் உங்களது ஐப்ரோஸை சரியாக திருத்தம் செய்யாவிடில் அது வளரும் வரைக்கும் நீங்கள் 2-3 வாரங்களாவது காத்திருக்க வேண்டும். இப்படி பெண்களுக்கு முக அழகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தப் புருவத்தை அடர்த்தியாக வைத்துக்கொள்வது எப்படி? என்று என தெரிந்துக்கொள்வோம்.
புருவங்களைத் திருத்தம் செய்யும்போது இரு கண்ணாடிகள் பயன்படுத்துவது அவசியம்:
புருவங்களை ஒரு வடிவத்திற்குக்கொண்டு வர முடிகளை அகற்றும் போது இரண்டு கண்ணாடிகளைப் பயன்படுத்துவது அவசியமான ஒன்று. ஒரு கண்ணாடியை முடிகளை அகற்றுவதற்கு உதவும் வகையிலும், மற்றொன்றை புருவங்கள் சரியான வடிவத்தில் வருகின்றனவா? என்பதை சரிபார்க்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி உபயோகிக்கும் போது நிச்சயம் உங்களின் புருவ முடி ஒழுங்கான வடிவத்திற்கு வர உதவியாக இருக்கும்.
வீட்டில் புருவமுடிகளை அகற்றுவதற்கான வழி:
பெண்கள் முன்பு போன்று இல்லை. பெரும்பாலான பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்ற காலங்கள் மறந்து தற்போது வீட்டிலேயே தங்களது புருவ முடியைத் திருத்தம் செய்துக்கொள்கின்றனர். அப்படி வீட்டிலேயே நீங்கள் ஐப்ரோஸ் செய்பவர்களாக இருந்தால், ஒரு நாளில் மேற்கொள்ளாமல் ஒரு நாளில் ஒரு சில முடிகளை மட்டும் எடுக்கவும். இப்படி நீங்களே பார்த்து பார்த்து உங்களது புருவத்தினை வடிவமைக்கிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களது இது நல்ல பலனளிக்கும். ஒரு வேளை வீட்டில் வைத்து புருவமுடிகளை அகற்றத் தெரியாவிடில் இதுப்போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்.
மேலும் புருவங்களின் மேல்பகுதியிலிருந்து உங்களது முடியை அகற்ற வேண்டாம் என கூறப்படுகிறது. குறிப்பாக சிறிய ப்ரஷ் மூலம் உங்கள் புருவங்களை நன்றாக கோதிவிட்டு இயற்கையான வடிவத்தில் ஏதேனும் புது முடி வளர்கிறதா? என்று பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி வளர்ந்திருந்தால் அதனை மட்டும் வளர்க்க வேண்டும். வேறு எந்த முடியை அகற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதோடு உங்கள் புருவம் அடர்த்தியாக இருப்பதற்கு புருவங்களை ட்ரிம் செய்வது அவசியம். இதற்கு ஸ்பூலி ப்ரஷ் மற்றும் சில நேரங்களில் கத்திரிக்கோலைப்பயன்படுத்தி நீங்கள் முடியை வீட்டிலேயே ட்ரீம் செய்துக்கொள்ளலாம்.
இதுப்போன்று வழிகளில் உங்கள் புருவ முடிகளைத் திருத்தம் செய்தாலும், புருவ முடிகளை அடர்த்தியாக வளர்வதற்கு சில வழிகளைப் பின்பற்றலாம். தினமும் குளிக்கச்செல்லும் போது புருங்களின் முடி வளர விளக்கெண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இது புருவங்களின் முடி வளர உதவியாக உள்ளது. இதேப்போன்று விளக்கெண்ணெய்யுடன் ஆலிவ் எண்ணெய், அரோமா எண்ணெய் சமஅளவு கலந்து புருவத்தில் தேய்த்து வரலாம். இந்த எண்ணெய் புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவியாக உள்ளது. இதுப்போன்று செய்வதற்கு முன்னதாக புருவத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் ரத்த ஓட்டம் மிகவும் சீராகி முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவியாக உள்ளது.