(Source: ECI/ABP News/ABP Majha)
Walking for weight loss: இன்று வாக்கிங் போயாச்சா, அது மட்டும் போதுமா? இனி இதையும் ஃபாலோ பண்ணுங்க.!
தினம் வாக்கிங் போறேன் ஆனால் எடை மட்டும் குறைய மாட்டிங்குது என புலம்புகிறீர்களா? வாக்கிங் போறதுக்கு நிறைய முறைகள் இருக்கு. வாக்கிங் என்ன புதுசா முறைகள்னு கேக்குறீங்களா, அப்போ இதை செஞ்சு பாருங்கள்.
தினம் வாக்கிங் போறேன் ஆனால் எடை மட்டும் குறைய மாட்டிங்குது என புலம்புகிறீர்களா? வாக்கிங் போறதுக்கு நிறைய முறைகள் இருக்கு. வாக்கிங் என்ன புதுசா முறைகள்னு கேக்குறீங்களா, அப்போ இதை செஞ்சு பாருங்கள்.
நடைப்பயிற்சி மிகவும் எளிமையான, மற்ற அனைத்து உடற்பயிற்சிகளுக்கும் இது ஆரம்பமாக இருக்கும்.
தினம் ஒரே மாதிரி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் பெரிய அளவில் எடை குறைய வாய்ப்பு இல்லை. ஒரு வாரத்திற்கு இந்த மாதிரி நடந்து பாருங்கள். தானாக எடை குறையும்.
நாள் 1 - குறைந்தது 20 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
5 நிமிடம் - வார்ம் அப் , மெதுவாக நடக்க வேண்டும்.
10 நிமிடம் - வேகமாக நடக்க வேண்டும்
5 நிமிடம் - கூல்- டவுன் நிதானமான வேகத்தில் நடக்கவும்.
நாள் 2 - 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
5 நிமிடம் - வார்ம் அப் , மெதுவாக நடக்க வேண்டும்.
20 நிமிடம் - வேகமாக நடக்க வேண்டும்
5 நிமிடம் - கூல்- டவுன் நிதானமான வேகத்தில் நடக்கவும்.
நாள் 3 - 40 நிமிடம் நடக்க வேண்டும்.
5 நிமிடம் - வார்ம் அப் , மெதுவாக நடக்க வேண்டும்.
30 நிமிடம் - வேகமாக நடக்க வேண்டும் - ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை 30 வினாடிகள் கூடுதல் வேகத்துடன் நடக்கவும்.
5 நிமிடம் - கூல்- டவுன் நிதானமான வேகத்தில் நடக்கவும்.
நாள் 4 - 45 நிமிடம் நடக்க வேண்டும்.
5 நிமிடம் - வார்ம் அப் , மெதுவாக நடக்க வேண்டும்.
35 நிமிடங்கள் - விரைவாகவும், சீரான வேகத்துடனும் நடக்க வேண்டும். முடிந்த வரை ரயில்வே மேம்பாலங்கள் அல்லது மலைப்பகுதியில் நடக்கலாம். உயரமான பகுதியில் வேகமாக நடக்கும் போது கூடுதலாக கலோரிகள் குறையும்.
5 நிமிடம் - கூல்- டவுன் நிதானமான வேகத்தில் நடக்கவும்.
நாள் 5 - 50 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
5 நிமிடம் - வார்ம் அப் , மெதுவாக நடக்க வேண்டும்.
40 நிமிடம் - வேகமாக நடக்க வேண்டும் - 30 வினாடிகள் கூடுதல் வேகத்துடனும், 60 வினாடிகள், வேகத்துடனும் நடக்க வேண்டும். தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இதே மாதிரி நடக்க வேண்டும். +
5 நிமிடம் - கூல்- டவுன் நிதானமான வேகத்தில் நடக்கவும்.
நாள் 6 - 60 நிமிடங்கள்
5 நிமிடம் - வார்ம் அப் , மெதுவாக நடக்க வேண்டும்.
50 நிமிடங்கள் - சீரான வேகத்துடன் கூடுதல் தூரம் நடக்கவும்.
5 நிமிடம் கூல்- டவுன் நிதானமான வேகத்தில் நடக்கவும்.
நாள் 7 - 60 நிமிடங்கள்
5 நிமிடம் - வார்ம் அப் , மெதுவாக நடக்க வேண்டும்.
50 நிமிடம் - வேகமாக 3 நிமிடமும், 1 நிமிடம் கூடுதல் வேகத்துடனும் நடக்க வேண்டும். இதே போல் 50 நிமிடமும் நடக்க வேண்டும்.
5 நிமிடம் கூல்- டவுன் நிதானமான வேகத்தில் நடக்கவும்.
இது ஒரு நடைபயிற்சிக்கான எளிமையான அட்டவணை ஆகும். இந்த மாதிரி நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடல் எடை தானாக குறையும்.