(Source: ECI/ABP News/ABP Majha)
Vitamin C | வைட்டமின் சி இல்லன்னா ஆரோக்கியத்துக்கு இதுவெல்லாம் தான் சிக்கல்!
அனைத்து ஊட்டச்சத்துகளும் சேர்த்த சரிவிகித உணவு எடுத்து கொள்வது இது போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் கவனித்து கொள்ளலாம்.
கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு, மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தால் கூட உடல் உறுப்புக்கள் செயல்படுவதில் சிரமம் ஏற்படும் . அனைத்து ஊட்டச்சத்துகளும் சேர்த்த சரிவிகித உணவு எடுத்து கொள்வது இது போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் கவனித்து கொள்ளலாம்.
வைட்டமின் சி ஆனது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி குறைவாக இருந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என தெரிந்து கொள்வோம்.
ஸ்கர்வி - இது வைட்டமின் சி ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும். ஈறு வீக்கம், ஈறில் இருந்து இரத்தம் வடிதல், பல் பலவீனமின்மை, வலி, போன்ற பிரச்சனைகள் வரும். உணவில் போதுமான அளவு வைட்டமின் சி இல்லை என்றால் இது போன்ற அறிகுறிகள் தோன்றும். இதை வைத்து வைட்டமின் சி குறைபாடு என்பதை கண்டறிய முடியும்.
ஹைப்பர் தைராய்டிசம் - நீண்ட நாட்களாக வைட்டமின் சி குறைபாட்டுடன் இருந்தால் தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்து ஹைப்பர் தைராய்டிசம் என்ற பிரச்சனையை ஏற்படுத்தும். எடை இழப்பு, அதிக பசி, படபடப்பு, இதய துடிப்பு அதிகரித்தல், மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருக்கும். ஹார்மோன் பரிசோதனை செய்து பார்த்தால், தைராய்டு அளவுக்கு அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.
இரத்த சோகை - வைட்டமின் சி குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். வைட்டமின் சி ஆனது உணவில் இருக்கும் இரும்புச்சத்து உடல் உறிஞ்சு எடுத்து கொள்ளும். இது இரத்த சிவப்பணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். வைட்டமின் சி குறைபாடு இருந்தால் இரத்த சோகை பிரச்சனை வரும். இரத்த சோகை இருப்பவர்கள், இரும்பு சத்து மிக்க உணவுகளை மட்டும் எடுத்து கொண்டால் போதாது. அதனுடன் வைட்டமின் சி அதிகம் இருக்கும் உணவுகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
சரும ஆரோக்கியம் - சரும புத்துணர்வுடன் இருப்பதற்கும், சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வைட்டமின் சி அவசியம். வைட்டமின் சி போதுமான அளவு இல்லையென்றால், சருமம் பொலிவிழந்து, முகப்பரு, வறட்சி, போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வைட்டமின் சி குறைபாட்டை எப்படி சரி செய்வது - வைட்டமின் சி அதிகம் இருக்கும் பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகை உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.