மேலும் அறிய

கணினி முன்பாக அமர்ந்து வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா?அப்ப இத டிரை பண்ணுங்க!

இனிவரும் காலங்களில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கு தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது கட்டாயம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, அதிக தண்ணீர் அருந்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே உடல் எடையை எளிதில் குறைக்க முடியும். ஆனால் இதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறோமா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்துடன், உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக மாறிவரும் உணவுப்பழக்கங்கள், அதிக உடல் உழைப்பின்மை, முறையான உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல காரணங்களால் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த ஊடரங்கு காலக்கட்டத்தில் பலர் வீட்டில் இருந்தே கணினி முன்பாக அமர்ந்து பணிபுரிந்துவருவதாலும் உடல் எடை அதிகரிப்பை உணர்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? அதிகரித்த எடையைக்குறைக்க முடியவில்லை என்ற கவலை மட்டும் தான் உள்ளது. அதிலும் வீட்டிலிருந்து வேலைப்பார்ப்பதால், எந்த நேரமும் பணியாற்றக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  இனிவரும் காலங்களில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்குத் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது கட்டாயம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதோடு மட்டுமின்றி உடல் பருமனைக்குறைக்க சில நடைமுறைகளையும் உங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என கூறப்படும் நிலையில் அவை என்ன என்பது நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • கணினி முன்பாக அமர்ந்து வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா?அப்ப இத டிரை பண்ணுங்க!

சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளுதல்:

இன்றைய சூழலில் ஒருவரின் பணி நேரம் என்பது 8 மணி நேரத்திற்கு மேலாக உள்ளது. சிலருக்கு 24 மணி நேரமும் ஏதாவது ஒரு வேலையைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் யாருக்குமே இல்லை. நீங்கள் உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்றால், உங்களது உணவு உட்கொள்ளும் நேரத்தை மாற்றிக்கொள்ளவது அவசியமான ஒன்று.

குறிப்பாக இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது 8 மணிக்கு பிறகு இரவு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அது போல காலை நேர டிபனை 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவு தவிர்க்கக்கூடாது:

பரபரப்பாக அலுவலகம், கல்லூரிகள்,பள்ளி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களில் பெரும்பாலோனார் காலை உணவை முறையாக எடுத்துக்கொள்வதில்லை. இது தவறான ஒன்று. காலை நேரத்தில் 8 மணிக்குள் ஏதாவது ஒன்றைச்சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். இதனை ஸ்கிப்  செய்யும் பட்சத்தில் தேவையில் உடல் நலப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

மேலும் உடல் எடையைக்குறைக்க விரும்பும் நபர்கள், அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். இதோடு சில சமயங்களில் ஜூஸ் போன்றவற்றையும் நீங்கள் பருகலாம்.

உடற்பயிற்சி செய்தல்:

உடற்பயிற்சியா? அப்படின்னு கேட்கும் அளவிற்கு மக்களிடம் மறந்துப்போன ஒன்றாகிவிட்டது. ஆம் முறையாக ஜிம்களுக்கு சென்றவர்கள் கூட கொரோனா காலக்கட்டத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளமுடியவில்லை. எனவே ஜிம்களுக்கு தான் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.  உடல் ஆரோக்கியத்துடனும், உடல் எடையைக்குறைப்பதற்கு குறைந்த திறன் கொண்ட உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அதாவது வாக்கிங், ஸ்கிப்பிங், தோப்புக்கரணம் போடுவது  போன்ற சிறு சிறு பயிற்சிகளை தினமும் அரை மணி நேரமாவது மேற்கொண்டுவாருங்கள்.இது உங்களுக்கு நல்ல ரிசல்டைக்கொடுக்கும்.

  • கணினி முன்பாக அமர்ந்து வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா?அப்ப இத டிரை பண்ணுங்க!

மேலும் அதிகளவில் உணவை எடுத்துக்கொள்ளமால் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுங்கள். உணவின் அளவைக்குறைத்துக்கொள்ளும் போது உங்களுக்கு ஆரோக்கியமாகவும், உடல் புத்துணர்ச்சியோடும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆனால்  இதுப்போன்ற முறைகளை நீங்கள் மேற்கொண்டால் உடனே எடையைக்குறைக்க முடியாது..படிப்படியாக தான் குறைக்க முடியும். ஆனால் இதில் எவ்வித உடல் நல பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது. இனி நீங்களும் கொஞ்சம் இத டிரை பண்ணிப்பாருங்க. நிச்சயம் நல்ல ரிசஸ்ட் கிடைக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Ajith Son: புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Ajith Son: புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Embed widget