இளமையான தோற்றத்திற்கு வாழைப்பழத்தோல் உதவுகிறதா? எப்படி? இதோ தெரிஞ்சிக்கோங்க
வாழைப்பழத்தோலில் உள்ள வைட்டமின் பி6, பி12, புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மேக்ரோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன.
வாழைப்பழத்தோலில் வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இதனை பேஸ் மாஸ்க், ஸ்கிரப் போன்று பயன்படுத்தும் போது உங்களது சருமம் இளமையாகவும், மிருதுவாகவும் இருக்க உதவியாக உள்ளது.
வாழைப்பழம் என்பது உடலுக்கு மிகுந்த ஆற்றலை அளிப்பதோடு ஜுரண சக்திக்கும் உதவியாக உள்ளது. இதன் காரணமாகவே இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பாக வாழைப்பழத்தை நாம் சாப்பிடுகிறோம். ஆனால் வாழைப்பழத்தில் மட்டுமில்லை வாழைப்பழத்தோலிலும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது என்றால் நம்பவா முடிகிறது. ஆம் வாழைப்பழத்தோலில் உள்ள வைட்டமின் பி6, பி12, புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மேக்ரோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. இது நம்முடைய சருமத்தை இளமையாகவும், ஊட்டமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்நேரத்தில், வாழைப்பழத்தோலைப் பயன்படுத்தி எப்படி பேஸ் வாஸ் , ஸ்கிரப் போன்றவை தயாரிப்பது மற்றும் உபயோகிப்பது குறித்து நாம் இங்கே தெரிந்துக்கொள்வோம்.
வாழைப்பழத் தோலில் பேஸ் மாஸ்க்:
முதலில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் முழு வாழைப்பழத்தோல் மற்றும் வாழைப்பழத்தின் இரு துண்டுகளைப் போட்டு அரைக்க வேண்டும். இதோடு 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்போது பேஸ் மாஸ்க் தயாராகிவிட்டது.
இதனை 10-15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்தப்பின்னர், உங்களது முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். இதனையடுத்து 20 நிமிடம் அப்படியே வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வாழைப்பழத் தோல் ஸ்க்ரப்பர் செய்யும் முறை:
முதலில்வாழைத்தோலை சிறிய பகுதிகளாக நறுக்கி, முகம் மற்றும் கழுத்து முழுவதும் தேய்க்கவும். இவ்வாறு மேற்காள்ளும் போது தோலில் உள்ள கொலாஜனை அதிகரித்து, கருவளையங்களை குறைக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், உங்களது சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தவும் துளைகளை இறுக்கவும் உதவியாக உள்ளது.
இப்படியே 20-30 நிமிடங்கள் விட்டு, சூடான துணியால் துடைத்துவிட வேண்டும். இப்படி வாழைப்பழத்தோல் சரும தீர்விற்கு மட்டுமில்லாது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
பற்களை வெண்மையாக்குகிறது:
வாழைப்பழத்தோலில் ஈறு அழற்சி மற்றும் பீரிணய்டோன்டிடிஸ் போன்ற பீரியண்டால்ட் நோய்களுக்கு எதிராகப்போராடும் பாக்டீரியா எதிர்ப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே வாழைப்பழ தோலின் சிறு துண்டுகளை எடுத்து பற்கள் மற்றும் ஈறுகள் முழுவதும் தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும் எனக்கூறப்படுகிறது.
இதோடு வாழைத்தோலில் வெண்மையாக்கும் பண்புகள் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உங்கள் உதடுகளை பளபளப்பாக மாற்றவும் உதவியாக உள்ளது.