Summer: கொளுத்தும் வெயில்: பார்த்து பாதுகாப்பா உடலை பராமரிப்பது எப்படி? எளிய டிப்ஸ் இதோ!
கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.
கோடைகாலத்தில் இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினால் போதும் உங்கள் உடலின் ஆரோக்கியம் சீராக இயங்கிக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தை கடந்து போவது என்பதற்குள் படாத பாடாகி விடுகிறது. உடலில் நீர் வற்றிப் போவது, சரும எரிச்சல் என பல பிரச்சனைகளை சந்திக்கும்போது தான் நான் நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டிய தேவையை உணர்வோம். கடினமான சூழல்களில் தான் நமது உடல் ஒரு மாற்றத்தை கோருகிறது. இந்த சம்மரில் நீங்கள் எப்படியெல்லம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது
கோடைக்காலத்தில் நீரைவிட இன்றியமையாதது வேறு எதுவும் இல்லை. அதிகப்படியான உஷ்ணம் காரணமாக உடலில் நீர் வற்றிப் போகும் அபாயம் உள்ளது. உடலில் நீர் வற்றிபோகையில் நாம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். அதனால் வெளியே செல்லும்போது கூடவே தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளது. நீர் உடலின் தட்பவெப்பத்தைக் குறைப்பது மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தை பொலிவாகவும் வைக்கும் அதேபோல் உனவு செரிமானத்திற்கும் மிகவும் உதவக்கூடியது.
நடைபயிற்சி:
ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரம் நடைபயிற்சி செல்வது உங்கள் உடலை முறையான சுழற்சியில் வைக்க மிகவும் உதவக்கூடியது. உடலின் எடையை கட்டுக்குள் வைக்கவும் நடைபயிற்சி செய்யலாம். ஏதேனும் வேலையாக வெளியே செல்லும்போது அதிகளவிலான தூரமாக இல்லாத பட்சத்தில் வாகனத்திலோ பொதுபோக்குவரத்திலோ செல்லாமல் மிதிவண்டி அல்லது நடந்து செல்வது நல்லது.
தேர்ந்த உணவை சாப்பிடுங்கள்
உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடலை பராமரிப்பதற்கு மிக அவசியமான ஒன்று. பழ வகைகளை,தானிய வகைகள் போன்றவற்றை உட்கொள்வது உடலை சீராக இயக்க உதவும். அதே நேரத்தில் சோடா மற்றும் பொரித்த உணவு வகைகளை சாப்பிடுவது மற்றும அதிக கலரி உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக அவித்த உணவுகள், கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது நல்ல தேர்வாக இருக்கும்.
தூக்கம்
ஒரு நாளைக்கு குறைந்தது 7இலிருந்து 9 மனி நேர அளவு உடலுக்கு துக்கம் தேவை. மன உளைச்சல், சோர்வு, உடல் பருமன் போன்று பல பிரச்சனைகளுக்கான முதன்மைக் காரணமாக இருப்பது தூக்கமின்மை. தூங்குவதற்கு முன் செல்ஃபோன் பார்ப்பதை தவிர்ப்பது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். அதே போல் தூங்கச் செல்வதற்கு முன் வென் நீரில் குளிப்பது தூங்குவதை எளிதானதாக்கும்.
தர்பூசணி
தர்பூசணி குறைவான கலோரிகளை உடையது. மேலும் இதில் அதிகளவிலான வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம், நார்சத்து இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதற்கு பயன்படக்கூடியது. உடலை நீர்வற்றிப் போகாமல் வைத்திருக்கவும் இது உதவும்.
கோடைக்காலங்களில் இந்த எளிய வாழ்க்கை மாற்றங்களை செய்தோமானால் நமது உடலை பராமரிப்பதுடன் மட்டுமில்லாமல் நல்ல ஒரு பழக்கத்தையும் வளர்த்துக்கொள்ளலாம்.