மேலும் அறிய

Ghee : யாரெல்லாம் நெய் சாப்பிட்டால் பிரச்சனை? உங்க உடல்நலனில் இதெல்லாம் முக்கியம்..

பசு, ஆடு மற்றும் எருமை போன்ற கால்நடைகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படும். இந்த நெய்யில்,ஒமேகா 3-கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

குறிப்பிட்ட சில நோய் குறைபாடுகள் உடையோர் நெய்யை உட்கொள்ளக்கூடாது என பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு உட்கொள்ளும் பட்சத்தில் நோய் தாக்கத்தினை மிகவும் அதிகப்படுத்தும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பொதுவாக நெய் என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும், பொதுவாக ஹோட்டல்கள், வீடுகளில் முக்கியமாக உணவுகளில் நெய் சேர்த்துதான் சமையலே நடைபெறும்.

கால்நடைகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த நெய்யானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு உணவாக இருக்கிறது. நெய்யை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள் என பெரும்பாலான நாடுகளில் மக்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

பொதுவாக பாலாடை சேர்க்கப்பட்டு வெண்ணை கட்டியாக்கப்பட்டு, பின்னர் நெய் அதிலிருந்து காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது பெரிய நிறுவனங்களிலும் அதேபோல் வீடுகளிலும் நெய் தயாரிப்பு முறை என்பது தற்போது இலகுவாகிவிட்டது. மேலும் பசு, ஆடு மற்றும் எருமை போன்ற பல்வேறு வகையான கால்நடைகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த நெய்யில்,ஒமேகா 3-கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, 

நெய் சாப்பிடுவதன் மூலம்,  நோய் எதிர்ப்பு சக்தி, அழற்சியை எதிர்க்கும் திறன் , தீக்காயங்களுக்கு சிகிச்சை, தோல் ஆரோக்கியம்  போன்ற பல நன்மைகளைப் பெறலாம். நன்கு ஆரோக்கியமான குழந்தைகள் தொடர்ந்து நெய்யை உட்கொள்வதனால் கண்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக நெய்யை யாரெல்லாம் உண்ணக்கூடாது ,இது எவ்வகையான உடல்நல பிரச்சனைகளை தூண்டிவிடும் என்ற சில தகவல்கள் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். குறித்த சில உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் நெய்யை தவிர்க்குமாறு மருத்துவர்கள்  அறிவுறுத்தி உள்ளனர்.

பால் ஒவ்வாமை உள்ளவர்கள்:

சில பேருக்கு பால் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுகிறது. அவ்வாறு அவ்வாறானோர்  நெய் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால் நெய் சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் சிறிதளவாக உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். பால் ஒவ்வாமை உள்ளவர்கள் நெய்யை உண்ணும்போது  சொறி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதய பிரச்சனை உள்ளவர்கள்:

ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால் கொண்ட நெய்யை ஒருவர் சாப்பிடும்போது இதய நோய் அபாயம் அதிகமாகும் என ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. நெய்யில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொழுப்புகள் இருப்பதால் தொடர்ந்து நெய்யை சாப்பிடும் பட்சத்தில் ஒருவருக்கு மாரடைப்பு வரலாம் என கூறப்படுகிறது.

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள்:

நெய்யை உட்கொள்வதனால் கல்லீரல் பிரச்சினை ஏற்படாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருந்த போதும் ,  மஞ்சள் காமாலை மற்றும்  கல்லீரலில் அதிகமாக கொழுப்பு படிந்து உள்ளவர்கள் ,  நெய்யை உட்கொண்டால் அது கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இவ்வாறான நோய் உள்ளவர்கள் நெய்யை கண்டிப்பாக மிக குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உடல் பருமன் உள்ளவர்கள்:

உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள் நெய் உண்பதை தவிர்ப்பது சிறந்தது. அவர்கள் 2 டீஸ்பூன் நெய்யை உட்கொள்ளலாம் எனவும், ஆனால் அதிகமாக உட்கொள்வது ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நெய்யை  தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களுக்கு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. நெய்யில் இருக்கும்   லினோலிக் அமிலம்  எடையைக் குறைக்க உதவும் என்றாலும் ,அது கலோரி நிறைந்த உணவாக இருப்பதால் உடல் பருமனுக்கும் வழிவகுக்கும் என அறியப்படுகிறது.

செரிமான பிரச்சனை உள்ள கர்ப்பிணி தாய்மார்கள்:

கர்ப்பிணித் தாய்மார்கள் நெய்யை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இது அஜீரணம் மற்றும் உடல் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நெய் ஒரு மலமிளக்கியாக இருந்தாலும், கர்ப்பிணிகள்  ஜீரணிக்க கடினமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget