மேலும் அறிய

DOGS : 'சாலுக்கி’ பரிசு பொருளாகிய அரேபிய நாய்கள்..!

ஆர்வமும் , செல்வாக்கும் கொண்ட பிரித்தானியர்கள் பலர் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், மதிய கிழக்கு நாடுகளுக்கும் பறந்து போய் குறுநில மன்னர்கள் பலரிடம் இருந்து கூர் முக  நாய்களைப் பெற்றுத் திரும்பினர்

வேட்டைத் துணைவன் - 10

கன்னி – சிப்பிப்பாறை பகுதி 2

பெரும்பாலான பிரித்தானியர்களின் வேட்டைக் குறிப்புகளில் “shikari” என்ற சொல்லை நாம் பார்க்க முடியும். இந்த இந்திச் சொல்லுக்கு வேட்டைக்காரன் என்று பொருள். ஒவ்வொரு வேட்டைக்கும் அந்த பகுதிசார் அறிவுடைய ஓர் தேர்ந்த வேட்டையாடி தேவை. கூர் முக நாய்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் முயல் வேட்டைக்கும் சரி, பருவெட்டு நாய்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் பன்றி வேட்டையும் சரி தேர்ந்த காடுபார்க்கும் ஆட்கள் இல்லாமல் வேட்டை சிறக்காது. குறிப்பறிந்து செடி- புதர் மண்டிய இடங்களை ஒதுக்கி முதலில் உயிர் பிராணி தடம் அரிந்து சமிக்கை தருபவர்கள் அவர்கள்தான். எனவே இப்படி உள்ளுர் shikari கள் பலரை பிரித்தானியர்கள் தமது வேட்டைக் குழுக்களில் இணைத்து இருந்தனர்.

தென்னிந்திய சாதி – குடிகளைப் பற்றி நீண்டதொரு ஆய்வு செய்து,  “castes and tribes of southern india “ என்ற தலைப்பில் எழு தொகுதிகளை அடக்கிய புத்தகத்தை எழுதிய Edgar Thurston தனது புத்தகத்தில் “boyas”  சமூக மக்களையும் பிரித்தானியர்கள் shikari  களாகப் பயன்படுத்தினர் எனக்குறிப்பிடுகிறார். ( அவர்களிலும் poligar கள் உண்டு ) அதே வேலை வட இந்தியாவில் கூர்மையான வேட்டைத் திறன் கொண்ட நிறைய முசல்மான்கள் shikari  ளாக பிரித்தானியர்களுடன் இருந்தனர்.  தன்னை shikari   யாக அறிவித்துக் கொண்ட பிரித்தானியர்களும் இங்கு உண்டு.DOGS : 'சாலுக்கி’  பரிசு பொருளாகிய அரேபிய நாய்கள்..!

1885 ஆம் ஆண்டு வெளியான, “The new shikari at our indian station” தொகுதி ஒன்றில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை பார்க்க முடிகிறது.

பிரித்தானிய அதிகாரி,  பெர்சியாவை சேர்ந்த grey hound களுடன் ( சாலுக்கி வகை நாய்களை பிரித்தானியர் persian greyhound என்றே அழைத்தனர் – ஏன் poligar hound – greyhound of south india என்று பதிவு செய்ததும் உண்டுதான்) முகமதிய வணிகர் ஒருவர் வருவதைப் பார்க்கிறார். அதன் வசீகரம் யாரைத்தான் ஈர்க்காது! உடனே தனது நண்பனான “கான்” னை அழைத்து. அந்த நாயை அவ்வணிகரிடம் இருந்து தமக்கு வாங்கித்தர முடியுமா என்கிறார். வணிகரிடம் பேசிட்டு வந்த கான், இந்த நாய்கள் விற்பனைக்கு அல்ல ! அது மெட்ராஸ் மாகாணத்தில் இவ்வணிகரிடம் அதிக அளவில் குதிரைகள் வாங்கிய Mr. Thompson என்பவருக்கு அன்பளிப்பாக போய் கொண்டிருக்கிறது என்ற விவரத்தைச் சொல்கிறார். ( நினைவில் கொள்க, முஸ்லீம்களுக்கு நாய்கள் ஹராம்! ஆனாலும் சாலுக்கிக்கு விலக்கு உண்டு)

DOGS : 'சாலுக்கி’  பரிசு பொருளாகிய அரேபிய நாய்கள்..!
Persian Greyhound

சாலுக்கி போன்ற அரேபிய இன நாய்களைப் பரிசளிப்பதென்பது மிகுந்த மரியாதை நிமித்தமான ஒன்றாக கௌரவமான ஒன்றாகக் கருதப்பட்டது. போகப் பொதுவாக நாய்களைப் பரிசளிக்கும் வழக்கம் பிரித்தானியர்களிடமும்  அதிகம் காணப்பட்டது என்பதற்கு, முகலாய மன்னர் ஜஹாங்கீர் அவைக்கு வந்த sir thomas roe, மன்னருக்கு பரிசளித்த mastiff  நாய்களே சான்று.  சாலுக்கி போன்ற நாய்களுடைய அழகும், வேகமும் பிருத்தானியர்களை மிகப்பெரிய அளவில் வசீகரித்தது.  தனது சிறு பிராயத்தில், egypt க்கு பயணம் வந்த செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த Hon. Florence amherst நேரடியாக ட்ரான்ஸஜோர்டானில் இருந்து. பிரிட்டனுக்கு சாலுக்கி நாய்களை தருவித்து இன விருத்தி செய்து பெருக்கினார். லண்டனில் இது மிகப்பெரிய அளவில் இந்த நாய்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த நிகழ்வுக்குப் பின்புதான்.

DOGS : 'சாலுக்கி’  பரிசு பொருளாகிய அரேபிய நாய்கள்..!
ரோமம் இல்லாத sloughi வகை நாய்

ஆர்வமும் , செல்வாக்கும் கொண்ட பிரித்தானியர்கள் பலர் பின்னர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு, மதிய கிழக்கு நாடுகளுக்கும் பறந்து போய் குறுநில மன்னர்கள் பலரிடம் இருந்து கூர் முக  நாய்களைப் பெற்றுத் திரும்பினர். இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று, அவை அந்த அந்தப்பகுதி சார்ந்து, இனவிருத்தி முறை சார்ந்து ஒன்றோடு ஒன்று வேறுபட்டு இருந்தன.. ஆனால் மிகுந்த பிரயத்தனங்களுக்கு பின்னாக அதப் பெற்ற பிரித்தானியர்கள் தாங்கள் கொண்டு வந்ததே அசல் என்று வாதாடினார். உண்மையில் எல்லாமும் அசல் தான். (இந்நிலை நமது நாய்களுக்கும் நடந்தது – எப்படி என்பதை பின்னர் காண்போம்)

Fox hound களும் beagle வகை நாய்களும் கை கொடுக்காத நிலையில், இந்த வகை sighthound கள் தான் hunts club களுக்கு அடுத்த கட்டத் தேர்வாக இருந்தது. கப்பல் வழியாக வந்து இறங்கியது பல நூறு நாய்கள். ஆம் வெள்ளைக்காரன் கொண்டு வந்து விட்டது சரிதான். குருநாதர் சொன்னது ஏதோ ஒரு புள்ளியில் வாஸ்தமாகிறதுதான்.  (ஆனால் அது மட்டுமே கதையல்ல ) - தேர்ந்த வேட்டையாடி நாய்கள் தான் என்ற போதிலும் இவை இங்குள்ள சீதோசனத்தை தாக்குப்பிடித்து நின்ற போதிலும், இந்த மண்ணுக்கு பழக்கப் படாத காரணத்தால் களம் சிறக்கவில்லை. நிறைய காயம் பட்டுக்கொண்டன, ஆக மீண்டும் பொருள் முடக்கம். Hunts club முன்பாக மீண்டும் ஒரு சவால்.

DOGS : 'சாலுக்கி’  பரிசு பொருளாகிய அரேபிய நாய்கள்..!
கருப்பு வெள்ளை நிறம் கொண்ட ரோமம் உடைய saluki நாய்

இப்போது எதற்கு இந்தக் கதை எல்லாம் என்கிறீர்களா?  காரணம் இருக்கிறது. அழுத்தமான காரணமே இருக்கிறது. Hunts club க்கு முன்பு இருந்த இச்சவாலை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், வேட்டை என்ன ஆனது?  வெற்றி கண்டார்கள் எனில் அதுக்கும் நமது கன்னி / சிப்பிப்பாறை நாய்களின் வரலாறுக்கும் என்ன தொடர்ப்பு..? முதல் முதலாக இன்நாய்கள் வெள்ளையர் வாயிலாகவா நமக்கு அறிமுகம் ஆகின? பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Embed widget