Telepathic signs : காதலே! காதலே! இண்டர்நெட் யுகத்திலும் டெலிபதி காதல் ஒர்க் அவுட் ஆகும்! எப்படி?
உலகமே ஒரு கிராமம் தான். இணையவசதி இருந்தால் போது உலகின் எந்தப் பகுதியையும் கண்ணால் இருந்த இடத்திலிருந்தே காணலாம்.
உலகமே ஒரு கிராமம் தான். இணையவசதி இருந்தால் போது உலகின் எந்தப் பகுதியையும் கண்ணால் இருந்த இடத்திலிருந்தே காணலாம். எங்கிருப்பவரிடமும் பேசலாம், பார்க்கலாம். ஆன்லைனில் படிக்கலாம், வியாபாரம் செய்யலாம் ஏன் வரண் கூட தேடலாம். ஆனாலும் எண்ண அலைகள், மனித உள்ளுணர்வுகளுக்கு ஏதும் ஈடில்லை எனலாம். அந்த அளவுக்கு மனித மனங்களின் ஆற்றல் சக்தி வாய்ந்தது. அதனால் தான் டெலிபதிக் லவ் சாத்தியம் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள்.
எதிரே இருக்கும் நபர் நம் மீது காதலில் இருக்கிறாரா என்பதை சில டெலிபதிக் சைன்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.
சிங்ரனைசேஷன்:
நீங்கள் உங்கள் விருப்பமானவருக்கு மெசேஜ் அனுப்பினால் என்னவென்று நினைத்து ஃபோனை எடுப்பீர்கள். அவரிடமிருந்து உங்கள் ஃபோனுக்கு ஒரு குறுந்தகவல் வந்து விழும். இது டெலிபதிக் லவ்வுக்கு ஒரு சான்று.
மனசுல இருக்கிறது அப்படியே புரிந்து கொள்ளலாம்..
உங்கள் பார்ட்னர் என்ன சொல்லப் போகிறார் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? அவர் சொல்வதற்கு முன்னரே நீங்கள் அதை சொல்லி விடுகிறீர்களா? உங்களுக்குள் டெலிபதி லவ் இருக்குங்க. இது நீங்கள் இருவருமே உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கிறீர்கள் என்பதற்கான சான்று.
பாசிடிவ் ஆல்வேஸ்
நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எப்போதும் பாசிடிவ் எண்ணங்களோடு இருந்தால் அவ்வப்போது சிரிப்புகளை பறிமாறிக் கொள்வீர்கள். அந்த புன்னகை ஆயிரம் அர்த்தங்களைக் கடத்தும். இதனால் உங்கள் இணையர் நீங்கள் எப்போதும் அவர் தேவை என நினைக்கிறீர்கள் என உணர்வார். உங்களையும் அவ்வாறாக உணரச் செய்வார்.
மூட் ஸ்விங்க்ஸ் எக்ஸ்சேஞ்
உங்கள் பார்டனருக்கு ஒரு பிரச்சினை கவலை என்றால் உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு சோக புயல் அடிக்கும். அதுபோல் அவர் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தாலும் உங்களுக்கு தெரியும். இதுவும் நீங்கள் இருவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளீர்கள் என்பதற்கு சாட்சி.
தும்மல், இருமல்..
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் என்றொரு பாடல் உண்டு. நீங்கள் டெலிபதிக் லவ்வில் இருந்தீர்கள் என்றால் உங்களை உங்கள் இணை நினைக்கும்போதோ அல்லது நீங்கள் அவரை நினைக்கும்போதோ அவருக்கு தும்மலோ அல்லது விக்கலோ வரலாம்.
இவையெல்லாம் மேம்போக்கான புரிதலுக்கானவையே. உண்மையால் காதல் வந்துவிட்டால் அதை புலப்படுத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரமாயிரம் வித்தைகள் இயல்பாகவே வந்துவிடும். அந்த உணர்வுகளை, உத்திகளை இப்படித்தான், இதுதான் என்று வரையறுத்து ஒரு வரம்புக்குள் வைக்க முடியாது. இயக்குநர் ஆதித்யன் காட்டியது போல் பார்க்காமலும் காதல் வளரும். ஒரு தலை காதலாகவும் இருக்கவும், என்ன வேண்டுமானாலும் செய்யும். ஆனால், நிச்சயம் வன்மம் கொண்ட பழி வாங்காது. ஆதலால் காதல் செய்வீர்!!!