Wheat Halwa : டேஸ்ட்டியான கோதுமை அல்வா எப்டி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க...
சுவையான கோதுமை அல்வா வீட்டிலேயே எப்படி ரொம்ப ஈசியா செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒன்றரை கப், தேங்காய் பால் – இரண்டு கப், தண்ணீர் – மூன்று கப், உப்பு – ஒரு சிட்டிகை, வெல்லம் இரண்டு கப் பொடித்தது, பொடித்த முந்திரி பருப்பு – சிறிதளவு, ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை
வெல்லம் இருந்தால் போதும் சுவையான டேஸ்ட்டியான கோதுமை அல்வா அட்டகாசமாக தயார் செய்ய முடியும். இதற்கு ஒன்றறை கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த கோதுமை மாவுடன் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 2 மணிநேரம் நன்கு ஊற விட வேண்டும். மாவு நன்கு தண்ணீரில் ஊறியதும் அதை கைகளால் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இதில் இருக்கும் திப்பிகளை வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய தண்ணீரை ஒரு மணிநேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.
ஒரு மணிநேரம் கழித்து தெளிந்த தண்ணீரை மட்டும் மெதுவாக பிரித்து எடுத்து கீழே ஊற்றி விட வேண்டும். மீதம் இருக்கும் இந்த கோதுமை பாலுடன், 2 கப் அளவிற்கு கெட்டியான தேங்காய் பாலை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாய் அல்லது அடி கனமான சற்று அகலமான பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் உருகியதும் அதை சுத்தமாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்து, தயார்செய்து வைத்துள்ள கோதுமை பாலை ஊற்றி நன்கு கொதிக்கவைக்க வேண்டும். கோதுமைப்பால் கொதித்து ஓரளவுக்கு கெட்டியாக திரண்டு வரும்பொழுது வெல்லப் பாகை ஊற்றி நன்கு மிக்ஸ் செய்துவிட வேண்டும். தண்ணீர் எல்லாம் வற்றி திரண்டு வரும் சமயத்தில் ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த முந்திரிகளை தூவிக்கொள்ளலாம். பின்பு தொடர்ந்து கரண்டியால் இடைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது அல்வா pan -இல் ஒட்டாமல் வரும். இதன் நிறம் நல்ல டார்க் ப்ரெளன் நிறத்திற்கு மாறி இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டியான கோதுமை அல்வா தயார்.