Summer Tips: சுட்டெரிக்கும் வெயில் - ஏசி இல்லையா? நோ ப்ராப்ளம் - வீட்டை கூலாக வைத்திருக்க எளிய வழிகள்
Keep House Cool Without AC: கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஏசி இல்லாத வீட்டையும் குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Keep House Cool Without AC: கோடை வெயிலை சமாளிக்க ஏசி இல்லாமலேயே வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுள் எளிய வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சுட்டெரிக்கும் கோடை வெயில்:
கோடை வெயில் இன்னும் முழுமையாக தொடங்கவே இல்லை. ஆனாலும், சூரியன் பொதுமக்களை வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக உள்ளது. ஆனால், வீட்டிற்குள்ளேயே அனல் வீசி வருகிறது. வசதி படைத்தவர்கள் வீட்டில் உள்ள ஏசியை ஆன் செய்து அனலில் தப்பித்து வருகின்றனர். அதேநேரம், நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு, வீடே கனவாக இருக்கும்போது அதில் ஏசி எங்கே இருக்கப்போகிறது. ஆனால், கவலை வேண்டாம் ஏசி இல்லாவிட்டாலும், மிக எளிதாக வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சில ஆலோசனைகள் உள்ளன. இதன் மூலம் கூடுதல் செலவின்றி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து உங்களை காத்துக்கொள்ள முடியும்.
ஏசி இன்றி வீட்டில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வழிகள்:
1. இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வையுங்கள்
சூரியன் மறைவை தொடர்ந்து இரவில் வெப்பநிலை குறைகிறது. அந்த நேரத்தில் வெப்பம் குறைந்த காற்று உங்கள் அறைக்குள் பயணிப்பதை ஊக்குவிக்க ஜன்னல்களை திறந்து வையுங்கள். இது நீங்கள் நன்றாக தூங்கவும் உதவும். குளிர்ந்த காற்று இரவு முழுவதும் சுழன்று கொண்டே இருப்பதால், குளிர்ச்சியான சூழலில் காலைப்பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்க முடியும். கட்டிட அறிவியலில், இது நைட்-ஃப்ளஷ் காற்றோட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. காலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூட மறக்காதீர்கள்
2. ஜன்னல்களை உறைகளை கொண்டு மூடலாம்
கோடை வெயிலின் தாக்கம் உங்கள் வீடுகளில் பெரும்பாலும் ஜன்னல்கள் வழியாகவே வெப்பத்தை அளிக்கிறது. அதிக வெயில் நேரங்களில் ஷேடுகள் அல்லது கருப்பு நிற திரைகளை கொண்டு வெப்பத்தைத் தடுத்தால், ஏசி இல்லாவிட்டாலும் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும்.
3. மின்சாதனங்களை இரவில் பயன்படுத்துங்கள்
பெரிய மின் சாதனங்கள் கணிசமான அளவு வெப்பத்தை வெளியிடுகின்றன. வாஷிங் மெஷின் போன்ற இயந்திரத்தை இயக்க மாலை நேரம் வரை காத்திருக்கவும், அப்போது வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். துவைத்த துணிகளை வெளியே உலர வைக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் குறைக்கும் அதே வேளையில், துணி உலர்த்தியை இயக்குவதற்கான செலவைச் சேமிக்கலாம்.
4. விண்டோ ஷேட்
உங்களது ஜன்னலின் தலைக்கு மேல் ஷேட் அமைப்பது அல்லது அருகிலேயே நிழல் தரும் வகையிலான மரத்தை வளர்ப்பதன் மூலம், கோடை காலத்தில் வெயில் நேரடியாக வீட்டிற்குள் பாய்வதை தடுக்க முடியும்.
5. விசிறிகளை சரியாக பயன்படுத்துங்கள்
மின் விசிறிகள் என்பது காற்றை குளிபடுத்தாது மாறாக அவை காற்றை தொடர்ந்து நகர்த்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் புதிய காற்றை பயனாளிகள் மீது உமிழ்ந்து குளிர்ச்சியான சூழலை உணரச் செய்கிறது. அதன்படி, வெளியே இருந்து வரும் காற்றை உறிஞ்சுவதற்கு ஏற்ற இடத்தில் மின் விசிறியை வைத்து பயன்படுத்துங்கள்.
6. எக்சாஸ்ட் விசிறிகள்
சமையலறை மற்றும் கழிவறைகளில் அமைக்கப்படும் எக்சாஸ்ட் விசிறிகள், சூடான காற்றை உங்கள் வீட்டில் உள்ள வழக்கமான காற்றுடன் கலப்பதற்கு முன்னதாகவே வெளியேற்றுகிறது. எனவே, குளிக்கும்போதும் மற்றும் சமைக்கும்போதும் எக்சாஸ்ட் விசிறிகளை பயன்படுத்துவது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

