ஹோட்டலில் தங்கும்போது கவனிக்க வேண்டியவை?
பயணம், சுற்றுலா மேற்கொள்வது என்பது, பலருக்கு பிடித்த ஹாபியாக இருக்கலாம். அதிலும், இப்போது சோலோ ட்ராவலிங் என்பது புது ட்ரெண்டாக மாறி விட்டது.
பெண்கள் பலர் தனியாக டிராவல் செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படி வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு நாம் பயணம் செய்யும் போது ஹோட்டல் புக் செய்து அதில் தங்குவது என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி விடுகிறது.
பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு நாம் பாதுகாப்பான ஹோட்டல் அறைகளில் தங்குவது என்பது மிகவும் அவசியமாகும்.
அறைக்குள் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் கருவிதான் தாழ்ப்பாள். ஆனால், அது சரியாக பொறுத்தப்பட்டிருக்கிறதா இல்லை, வேறு ஏதேனும் பிரச்சனை அதில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
ஷவரின் ஓட்டைகள், ஃப்ளஷ் டேங்க் அருகே, அலமாரியின் ஆணி இடுக்குகள் என அனைத்து இடங்களிலும் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். கழிவறைக்கு வேறு கதவு இருக்கிறதா? ஏதேனும் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும்.
அறையில், செல்போன் சிக்னல் கிடைக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். உங்கள் போனில் பார்ப்பதோடு, அறையில் இருக்கும் லேண்ட்லைனும் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே போல, திடீரென தீ அல்லது நீங்கள் இருக்கும் கட்டடத்திற்கு ஆபத்து வந்தால் உடனடியாக தப்பிக்க வழி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்
நீங்கள் இருக்கும் உங்கள் அறையை சுற்றி சந்தேகத்திற்குரிய நபர்கள் வலம் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும்.
விலை மதிப்பு மிக்க பொருட்களை வைத்து விட்டு செல்கையில் அதை பாதுகாப்பாக வைக்கவும்.